அமெரிக்க சிறையில், பெண்களுக்கு பலவந்தமாக கருத்தடை அறுவை சிசிச்சை செய்யப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 148 பெண் கைதிகளை சிறை மருத்துவர்கள் வற்புறுத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக புலனாய்வு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
2006- -– 2010க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மட்டும் சவுசில்லாவில் உள்ள ‘வேல்லி பெண்கள் சிறையில் இருந்த கைதிகளுக்கும் கரோனாவில் உள்ள சிறை கைதிகளுக்கும் இந்த கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக அந்த அறிக்கை ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறது.
இந்த சத்திரசிகிச்சைகளை செய்வதற்காக மாநில அரசிடம் இருந்து சிறை துறையினர் எந்த முன் அனுமதியையும் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனைக்காக சிறைக்கு சென்ற பெண்களில் கர்ப்பிணியாக இருந்த பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
மீண்டும் அவர்கள் குற்றம் செய்துவிட்டு சிறைக்கு வரக்கூடும் என்பதால் சந்தேகத்துக்குரிய சில பெண்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டதாக சிறைத்துறை வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.