Home » அதிசய உலகம் » அணுகுண்டுகளும் பிகினிகளும்: Birthday to Bikini

அணுகுண்டுகளும் பிகினிகளும்: Birthday to Bikini

bikini2அணு­குண்­டுக்கும் பிகினி (Bikini) எனும் நீச்­ச­லு­டைக்கும் என்ன தொடர்பு என்று யாரி­டமும் கேட்டால் மினி சம­ரொன்று ஏற்­ப­டக்­கூடும். ஆனால் இவற்­றுக்கு தொடர்­பி­ருக்­கி­றது என்­பதே உண்மை.

பிகினி ஆடை அறி­மு­க­மாகி இன்­றுடன் 67 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. அதா­வது பிகி­னிக்கு இன்று 67 ஆவது பிறந்த தினம் என்­பது மற்­றொரு சுவா­ரஷ்­ய­மான தகவல்.

மார்­பகப் பகு­தி­யையும் இடுப் புப் பகு­தி­யையும் மறைக்கும் வித­மான இரு பகு­திகள் கொண்ட நீச்சல் ஆடைதான் பிகினி எனப்­ப­டு­கி­றது.

கி.மு 1400 ஆண்­ட­ளவில் வரை­யப்­பட்ட கிரேக்க ஓவி­யங்­களில் பெண்கள் பிகினி போன்ற ஆடை­களை அணிந்த நிலையில் விளை­யாட்டுப் போட்­டி­களில் ஈடு­ப­டு­வது உரோம தேவ­தை­யான வீனஸ் பிகினி ஆடை அணிந்த நிலை­யி­லி­ருக்கும் சிலை­யொன்­றையும் தொல்­பொருள் ஆய்­வா­ளர்கள் இத்­தா­லியில் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

ஆனால், நவீன பிகி­னி­களின் வர­லாறு கடந்த நூற்­றாண்­டில்தான் ஆரம்­ப­மா­கி­யது. பெண்கள் பகி­ரங்க இடங்­களில் உடல் வெளித்­தெ­ரியும் வித­மாக குளிப்­பதோ நீந்­து­வதோ மேற்­குல­கி­னரால் கூட நீண்­ட­கா­ல­மாக ஏற்­றுக் ­கொள்­ளப்­ப­ட­வில்லை.

1907 ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லிய நீச்சல் வீராங்­க­னை­யான அன்னட் கெல்­லர்மேன் அமெ­ரிக்­காவின் பொஸ்டன் நகர கடற்­க­ரையில் வன் பீஸ் எனும் நீச்­ச­லுடை அணிந்­த­மைக்­காக கைது செய்­யப்­பட்டார். தற்­போ­தைய வன் பீஸ் ஆடை­க­ளை­விட உடலை அதிகம் மறைக்கும் வித­மான ஆடை அது.

1910 ஆம் ஆண்­ட­ள­வில்தான் வன் பீஸ் நீச்­ச­லுடை கடற்­க­ரை­களில் அணி­வ­தற்கு பொருத்­த­மான ஓர் ஆடை­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. நிலைமை இப்­ப­டி­யி­ருக்க, இரு சிறிய பாகங்­களை மாத்­திரம் கொண்ட ரூ பீஸ் எனும் பிகி­னிகள் அறி­மு­க­மா­னது இரண்டாம் உலக யுத்­தத்தின் பின்­னர்தான்.

bikini1மேற்கு ஐரோப்­பாவில் 1939 ஆண்­டின்பின் யுத்­த­முற்ற முத­லா­வது கோடைப் பரு­வ­மாக 1946 ஆம் ஆண்டு கோடைப் பருவம் அமைந்­தது. மக்­களின் “விடு­தலை உணர்வை” பெஷன் துறை­யிலும் பிர­தி­ப­லிக்கச் செய் ­வ­தற்கு ஆடை வடி­வமைப்­பா­ளர்கள் முயற்­சித்­தனர். அவ்­வே­ளையில் மிகச் சிறிய நீச் சல் ஆடையை தயா­ரிப்­பதில் பிரான்ஸை சேர்ந்த ஜாக்ஸ் ஹெய்ம் என்­ப­வ­ருக்கும் லூயிஸ் ரியர்ட் என்­ப­வ­ருக்கும் போட்டி நில­வி­யது.

ஜாக்ஸ் ஹெய்ம் தான் தயா­ரித்த நீச்­ச­லுடை உலகின் மிகச் சிறி­யது என்­பதை வெளிப்­ப­டுத்தும் வித­மாக அட்டோம் Atom (அணு) என பெய­ரிட்டார். அவ­ருக்கு போட்­டி­யாக லூயிஸ் ரியர்ட் நீச்­ச­லு­டை­யொன்றை தயா­ரித்தார். இவர் ஒரு வாகனப் பொறி­யி­ய­லாளர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

1946 ஜூலை 5 ஆம் திகதி பாரிஸ் நகரில் நடை­பெற்ற பெஷன் கண்­காட்­சி­யொன்றில் இந்த ஆடையை காட்­சிப்­ப­டுத்­தினார் லூயிஸ் ரியர்ட்.

பிகினி என ஏன் பெயர் வந்­தது?

லூயிஸ் ரியர்ட்டின் நீச்­ச­லுடை அறி­மு­கத்­துக்கு சில நாட்­க­ளுக்கு முன்னர் பசுபிக் சமுத்­தி­ரத்­தி­லுள்ள பிகினி அட்டோல் எனும் சிறிய தீவில் அமெ­ரிக்கா அணு­குண்டு பரி­சோ­த­னையை நடத்­தி­யது. (பின்னர் 1958 ஆம் ஆண்­டு­வரை 23 அணு­குண்டு சோத­னைகள் அத்­தீவில் நடத்­தப்­பட்­டன). அவ்­வே­ளையில் பிகினி அட்டோல் எனும் தீவு செய்­தி­களில் அடி­பட்­டுக்­கொண்­டி­ருந்­ததால் பிகினி எனும் பெயரை தான் வடி­வ­மைத்த நீச்­ச­லு­டைக்கு சூட்­டினார் லூயிஸ் ரியர்ட்.

அதன்பின் பல்­வேறு அள­வு­களில் வடி­வங்­களில் பிகி­னிகள் தயா­ரிக்­கப்­பட்­டன. 1962 ஆம் ஆண்­டு­வெ­ளி­யான டொக்டர் நோ எனும் ஜேம்ஸ்பொன்ட் திரைப்­ப­டத்தில் ஊர்­சுலா என்ட்ரெஸ் முதல் தட­வை­யாக பிகினி அணித்­தமை அக்­கா­லத்தில் பர­ப­ரப்­பாக பேசப்­பட்­டது.

தற்­போது கடற்­கரை கரப்­பந்­தாட்டம், மெய்­வல்­லுநர் போட்­டிகள், உடற்­கட்டுப் போட்­டிகள் போன்ற விளை­யாட்­டுக்­க­ளின்­போதும் பிகினி அணி­யப்­ப­டு­கி­றது. உடற்­கட்டுப் போட்­டி­களில் ஆண்கள் அணியும் ஆடையும் பிகினி என அழைக்­கப்­ப­டு­கி­றது. 1951 ஆம் ஆண்டு லண்­ட னில் நடை­பெற்ற முத­லா­வது உலக அழ­கு­ராணி போட்­டி­யின்பின் அழகுராணி போட்டி களில் பிகினிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. வன் பீஸ் நீச சல் ஆடைகள் அனுமதிக்கப் பட்டன.

1990களில் தான் அழகுராணி போட்டிகளில் பிகினி சுற்று மீண்டும் ஆரம்பமாகியது. எனி னும், இவ்வருடம் இந்தோனே ஷியாவில் நடைபெறவுள்ள உலக அழகுராணி போட்டிக ளில் நீச்சலுடை சுற்று நீக்கப்பட் டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply