சிகரெட் பழக்கத்தை விட நினைப்பவர்கள் பலவாறு முயற்சிப்பார்கள் ஆனால் துருக்கியைச் சேர்ந்த நபரொருவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக சிகரெட் பழக்கத்தை நிறுத்துவற்காக தலைக்கு கூடு மாட்டி பூட்டுப்போட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளிடுகையில், குதையா மாகாணத்தில் வசிக்கும் 42 வயதான இப்றாஹீம் என்ற நபரே இவ்வாறு வித்தியாசமாக தலைக்கவசம் அணிந்துள்ளார்.
குறித்த நபர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த தலைக்கவசம் போன்ற கூடொன்றினை உருவாக்கியுள்ளார். பின்னர் அதனை தலையில் அணிந்து பூட்டொன்றி போட்டு அதன் திறப்புக்களை மகனிடமும் மனைவியடமும் கொடுத்துள்ளார்.
எனவே வெளியில் செல்லும் போது அவரால் அந்த கவசத்தினை திறந்து சிகரெட் புகைக் முடியாது என்பது திட்டமாம்.
26 வருடங்களாக நான் ஒரு நாளைக்கு 2 சிகரெட் பக்கெட்டுக்களை புகைத்துக்கொண்டே இருந்தேன். இதனால் அப்பழக்கத்தை நிறுத்தவே இவ்வாறு செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.