அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ஜெல்ஸில் 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையில் தலையில் காயமடைந்து 25 சதவீத தலையை இழந்தவருக்கு 58 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல், லொஸ் ஏஞ்ஜல்ஸில் பணியாற்றி வந்த ஆன்டானியோ லோபெஸ் சாஜ் (43), 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையில், மூளையில் காயமடைந்தார்.
இந்த தாக்குதல் நடந்தும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், நீண்ட கால தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மறு பிறவி எடுத்த போதும், அவர் தனது பேச்சுத் திறனை இழந்து விட்டார். இந்த தாக்குதல் அவரின் நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவர் 24 மணிநேர மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது.
இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி, பவுன்சர்களை பணியில் அமர்த்தும் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் மீது ஆன்டோனியோ வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், அவருக்கு 58 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க கலிபோனிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்றம் அளித்த மிகப்பெரிய இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவு இதுவே என்று வழக்கரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.