ஸ்பானிய இளம் டென்னிஸ் வீரர் பெர்னாண்டோ வேர்டஸ்கோ நிர்வாணப் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் பணத்துக்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர். ஆனால், பெர்னாண்டோ வேர்டஸ்கோ ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சில வருடங்களுக்கு முன்னர் நிர்வாணமாக போஸ் கொடுத்தாராம்.
24 வயதான வேர்டஸ்கோ, விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற இரவு விம்பிள்டன் கால் இறுதிப்போட்டியில் பிரித்தானிய வீரர் அன்டி முறேயை எதிர்த்து விளையாடவிருந்த நிலையில் அவரின் நிர்வாணப் புகைப்படம் மீண்டும் ஊடகங்களில் வெளியானது.
அன்டி முறேயின் தாயாரான ஜூடி முறேயும் வேர்டஸ்கோவின் ரசிகைகளில் ஒருவர் என்பதும் நேற்று தெரியவந்தது. இரு வருடங்களுக்கு முன்னர் பெர்னாண்டோ வேர்டஸ்கோ சிறப்பாக விளையாடுவதை அவதானிக்கத் தொடங்கினாராம் 53 வயதான ஜூடி முறே.
4 வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கிவிட்ட வேர்டஸ்கோவுக்கு 8 வயதான போது முழுநேர பயிற்றுநர் ஒருவரை அவரின் பெற்றோர் நியமித்தனர். 2001 ஆம் ஆண்டு தொழிற்சார் போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்த வேர்டஸ்கோ தற்போது உலகத் தரவரிசையில் 7 ஆம் இடத்திலுள்ளார். டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகளில் ஸ்பானிய அணி 3 தடவை சம்பியனாகுவதற்கு வேர்டஸ்கோ முக்கிய பங்காற்றியிருந்தார்.
28 வயதான அமெரிக்க மொடல் அழகியான ஜாரா மரியானோவை வேர்டஸ்கோ காதலித்து வருகிறார்.