ஆட்டோவில் ஏறும் பெண்களின் அழகை ரசிக்கும் வகையில் தமது ஆட்டோக்களில் கண்ணாடிகளை பொருத்தியிருந்த 19 ஆட்டோ சாரதிகளை மத்துகம பொலிஸார் கடந்த 27 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
கட்டை கவுண் அணிந்து கொண்டு ஆட்டோவில் ஏறும் யுவதிகளின் அந்தரங்கத்தை அவர்களுக்கு தெரியாமலேயே கண்ணாடி மூலம் கண்டு ரசித்த ஆட்டோ சாரதிகள் சிலர் ஆட்டோ தரிப்பிடத்தில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக மத்துகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து இச்சாரதிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து ஆட்டோ சாரதிகளிடம் ஆட்டோவுக்கு உள்ளே கண்ணாடி பொருத்தியது ஏன் என பொலிஸார் கேட்டபோது அவர்கள் மெளனம் காத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களான ஆட்டோ சாரதிகளை பிணையில் விடுவித்ததாகவும் எதிர்வரும் 8 ஆம் திகதி சந்தேக நபர்களை ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகளுடன் மத்துகம மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.