Home » இது எப்படி இருக்கு? » வளர்ப்பு நாயை வெட்டிச் சமைத்த இளைஞர் கைது!

வளர்ப்பு நாயை வெட்டிச் சமைத்த இளைஞர் கைது!

dogஅமெரிக்காவைச் சேர்ந்த இளைஞரொருவர் தான் வளர்த்த நாயை கொத்திக் கொலை செய்து சமைத்மைக்காக மிருகவதை தொடர்பிலான குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ப்ளொரிடா மாகாணத்தில் வசிக்கும் தோமஸ் எல்லியட் கங்கிங்ன் என்ற 25 வயதான நபரே மேற்படி குற்றத்திற்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த அந்நாட்டு பொலிஸார் கூறுகையில், தோமஸ் தான் வளர்த்த நாயை கழுத்தை நெரித்து துன்புறுத்தி துண்டுகளாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அதன் விலா எலும்புகளை சமைத்துள்ளார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் தர குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸார் தோமஸின் வீட்டுக்குச் சென்று நாயை சமைத்த பாத்திரம் மற்றும் அந்நாயின் மீதியான பகுதிகளையும் கண்டெடுத்துள்ளனர்.

இதுமட்டுமல்லாது சமைத்தது போக எஞ்சிய நாயின் பாகங்களை பிறகு உண்பதற்காக குளிரூட்டியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply