Home » கொறிக்க... » உலகம் » 90 இலட்சத்துக்கு விற்பனையான ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிள்

90 இலட்சத்துக்கு விற்பனையான ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிள்

bible20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான அல்பர்ட் ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிளொன்று நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது 68 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 90 இலட்சம்) ரூபாவிற்கு விற்பனையாகியுள்ளது.

ஏலத்தின் விற்பனையான பைபிள், 1932ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனும் அவரது மனைவியும் கையொப்பமிட்டு ஹரியட் ஹமில்டன் என்பவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்து.

‘இந்த பைபிளை அடிக்கடி வாசிக்கும் போது முடிவில்லாத அறிவையும் மனநிம்மதியையும் தரக் கூடியது’ என குறித்த பைபிளின் முதற் பக்கத்தில் ஜேர்மன் மொழியில் ஐன்ஸ்டைன் எழுதியுள்ளார். இந்த கருத்து 1930ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அவரது நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது என கருதப்படுகிறது.

ஐன்ஸ்டைன் தனது 12ஆது வயதிற்கு பின்னர் கடவுள் நம்பிக்கையற்றவராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர். எனினும், அன்பின் அடையாளமாகவே ஹரியட்டுக்கு குறித்த பைபிளை iயொப்பமிட்டு வழங்கியுள்ளார்.

Leave a Reply