கணவனின் ஆணுறுப்பை வெட்டிய குற்றத்திற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கத்தரின் கியு பெக்கர் என்ற 50 வயதான பெண்ணுக்கே இவ்வாறு ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கத்தரின் கியுவின் கணவனான 60 வயதுடைய டொபு கத்தரினை விவாகரத்து செய்யத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆத்திரத்தில் கத்தரின் கணவனுக்கு தூக்க உணவில் தூக்க மாத்திரையை கொடுத்து அவரது ஆணுறுப்பை 10 இன்ச் அளவான கத்தியால் வெட்டி குப்பையில் வீசியுள்ளார்.
பின்னர் கத்தரினே குற்றத்தை பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கத்தரின் மீது பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பினை நேற்று வழங்கிய நீதிமன்றம் கத்தரினுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இதன்போது கத்தரின் சட்டத்தரணி கத்தரினுக்கு சிறுவயதிலிருந்தே மனநிலை பாதிப்புள்ளதாகவும் அவரது கணவனால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் வாதாடியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.