இங்கிலாந்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அசிரியரின் வீட்டில் வளரும் ரஷ்பெர்ரி தாவரப் பற்றையை குறைக்கும் வரையில் அவரது வீட்டுக்கு தபால் வழங்க முடியாது என தபாற் காரர்கள் மறுத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் ஷ்ரொப்ஷெயார் எனுமிடத்தில் வசிக்கும் 67 வயதான மைக் ஸ்டீவன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரிரின் வீடுக்கே இவ்வாறு தபால் வழங்க முடியாது என ரோயல் மெய்ல் எனும் தபால் சேவை நிலையம் தெரிவித்துள்ளது.
7அடி உயரத்தில் வளர்ந்திருக்கும் ரஷ்பெர்ரி தாவரத்தினால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என அஞ்சியே தபாற் காரர்கள் ஸ்டீவனை எச்சரித்துள்ளனர்.
இது குறித்து ஸ்டீவன் கூறுகையில், வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த ரஷ்பெர்ரி தற்போது தபாற் பெட்டி இருக்கும் இடத்தையும் சூழ்ந்து வளாந்துள்ளது. ரஷ்பெர்ரி தாவரத்தினால் உடலுக்கு எதுவித பாதிப்பும் இல்லை. இத்தாவரத்தில் முட்களும் இல்லை.
எனவே எனக்குத் தெரிந்த வகையில் இந்த ரஷ்பெர்ரி தாவரப் பற்றை எந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தவில்லை. தபாற் சேவை நிறுவனம் தான் பிரச்சினையாக உள்ளது.
மேலும் அந்த தாவரத்திலிருந்து வந்த ரஷ்பெர்ரி பழத்தையும் தபாற் காரர்கள் சாப்பிட்டு சுவையானது எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தபாற் காரர்கள் வழங்கிய தகலின்படி இது தபாற்காரர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். எங்களுக்கு தபாற்காரர்களின் உடல் நலம் முக்கியமானது என ரோயல் மெய்ல் தபால் சேவை நிலையம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.