மூளையில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக நினைவாற்றலை இழந்தவர்களுக்கு மூளையில் இலத்திரனியல் சிப் ஒன்றை பதித்து பூரண நினைவாற்றல் திரும்பச் செய்யும் சிகிச்சைமுறை இன்னும் 10 வருடங்களில் நடைமுறைக்கு வரலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பொறியியலாளரான பேராசிரியர் தியோடர் பேர்கர் அண்மையில் நியூயோர்க்கில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடொன்றில் இந்த சிகிச்சை முறை குறித்து விளக்கியுள்ளார்.
விடயங்களை எப்படி நினைவுபடுத்துவது என்பதை மூளைக்கு மேற்படி சிப் கற்பிக்குமாம்.
ஏற்கெனவே எலிகள் மற்றும் குரங்குகளில் இச்சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதர்களைப் பொறுத்தவரை காக்கை வலிப்பு போன்ற நோய்களைக்கொண்டவர்கள் இச்சிகிச்சை முறையினால் முதலில் பயன்பெறுவார்கள் எனவும் பின்னர் அல்சீமர் போன்ற நோய்களைக் கொண்டவர்களுக்கு இது பயன்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.