யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுபோதை யில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று புதன்கிழமை காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்து போது அவரைத் துரத்திய நாய் தனது துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கி நாளைக் கடித்துக் குதறியுள்ளார்.
இதனால் நாய்க்கு முகத்தில் காயமேற்பட்டது அத்தோடு குறித்த இளைஞருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன் மயக்கமடைந்துள்ளார் அருகிலுள்ள வீட்டுக்காரரின் உதவியுடன் ஆட்டே ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.