Home » அதிசய உலகம் » இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் தானாக நகரும் எகிப்து சிலை

இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் தானாக நகரும் எகிப்து சிலை

statueஇங்­கி­லாந்தில் உள்ள அருங்­காட்­சி­ய­கத்தில் வைக்­கப்­பட்­டுள்ள 4000 ஆண்டு பழைமை வாய்ந்த எகிப்­திய சிலை ஒன்­று தா­னாக நகர்ந்து வரு­வதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்திலுள்ள குறித்த சிலை இது­வரை 180 டிகிரி அள­வுக்கு நகர்ந்­துள்­ளது. அதிர்வுகளால் இச்சிலை நகர்ந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காரணம் அதிர்வினால் இவ்வாறு நகர்ந்திருந்தால் அதனருகிலுள்ள சிலைகளும் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாம் இச்சிலை மாத்திரமே நகவர்வது அருங்காட்சியக நிருவாகிகளை குழப்பமடையச் செய்துள்ளது.

10 அங்குல உய­ரம்தான் கொண்ட இந்த சிலையை 80 ஆண்­டு­க­ளுக்கு முன்பு எகிப்து மம்மி ஒன்­றி­ட­மி­ருந்து கண்­டு­பி­டித்து எடுத்­துள்­ளனர். பின்னர் இது மான்­செஸ்டர் அருங்­காட்­சி­ய­கத்­திற்குக் கொண்டு செல்­லப்­பட்­டது.

இந்த சிலை­யா­னது கடந்த சில வாரங்­களில் மெது­வாக சுழன்­ற­படி நகர்ந்து வரு­வ­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இது முதலில் யாருக்கும் தெரி­ய­வில்லை. ஆனால் திடீ­ரென சிலை இருந்த நிலை­யி­லி­ருந்த வேறு பக்கம் திரும்­பி­ய­படி இருப்­பதைப் பார்த்து அருங்­காட்­சி­யக நிர்­வா­கிகள் அதிர்ச்சி அடைந்­துள்­ளனர். அப்­போ­துதான் சிலை நகர்ந்­தமை தெரியவந்­தது.

இந்த சிலையில் உள்ள நபரின் பெயர் நெப் சீனு என்­ப­தாகும். இந்த சிலை இரவில் நக­ரு­வ­தில்லை. பக­லில்தான் சுழன்று நகர்­கி­றது. இதுதான் பல­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.
பாரோ மன்­னர்கள் விடுத்த சாபம்தான் இந்த சிலையின் மர்­மத்­திற்கு காரணம் என்று ஒரு குழு­வினர் கதையைக் கிளப்­பி­யுள்­ளனர்.

இது­கு­றித்து அருங்­காட்­சி­ய­கத்தின் அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான காம்பல் பிரைஸும் நம்­பு­கிறார். அவர் கூறு­கையில், இது சாப­மாகக் கூட இருக்­கலாம் என்றார்.

பிரைஸ் மேலும் கூறு­கையில், என்­னிடம் மட்­டுமே சிலை வைக்­கப்­பட்­டுள்ள பெட்­ட­கத்தின் சாவி உள்­ளது. இந்த நிலையில் சிலை எப்படி நகருகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. யாரும் சிலையைத் தொடவே முடியாது. எனவே இதில் இறை மர்மமும் இருக்கலாம் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply