இங்கிலாந்திலுள்ள பால் உற்பத்தி நிறுவனமொன்று முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியை பயன்படுத்தி ‘உரோம தோல்’ கோட்டினை உருவாக்கியுள்ளனர்.
முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதலாவது ‘உரோம தோல்’ கோட் இதுவென நம்பப்படுகிறது.
அர்லா என்ற பால் உற்பத்தி நிறுவனமோ மேற்படி கோட்டினை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனமானது விரைவில் அறிமுகம் செய்யவுள்ள ஆண்களுக்கான விங்-கோ எனும் பால் குடிபானம் வெளியீட்டின் போது குறித்த கோட்டினையும் வெளியிடவுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆண்களின் நெஞ்சு முடி பயன்படுத்தி இந்த கோட்டினை உருவாக்க 200 மணித்தியாலங்களைச் செலவிட்டுள்ளனர் இக்கோட்டின் வடிவமைப்பாளர்கள்.
இங்கிலாந்திலுள்ள வலுவிழந்த ஆண்களுக்கு எதிராகவே இக்கோட் தயார் செய்யப்பட்டுள்ள கூறப்படுகிறது.
இதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உருவாக்கப்பட்டுள்ள இக்கோட்டினை இலங்கை மதிப்பில் சுமார் 500 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய குறித்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.