Home » கொறிக்க... » சொனியின் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

சொனியின் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

sony_xperia_z_ultra_1சொனி நிறுவனமானது 6.4 அங்குல திரையைக் கொண்ட ஸ்மர்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இம் மாதிரியின் பெயர் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா.

செம்சுங்கின் கெலக்ஸி நோட் போன்ற பெப்லட் என்றழைக்கப்படும் ஸ்மார்ட் போன்களை விட பெரிய திரையைக் கொண்ட சாதனமொன்றை சொனி வெளியிடப்போவதாக நீண்ட நாட்களாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கறுப்பு, வெள்ளை, ஊதா என மூன்று நிறங்களில் இது சந்தைக்கு வரவுள்ளது.

2.2GHz quad-core Qualcomm Snapdragon 800 புரசசர், 2 ஜி.பி. ரெம், 64 ஜி.பி. வரை அதிகரிக்கக்கூடிய 16. ஜி.பி. உள்ளக நினைவக வசதியையும் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா கொண்டுள்ளது.

இதன் 6.4 அங்கு திரை 1080×1920 பிக்ஸல் துள்ளியமானதுடன் சொனியின் புத்தம் புதிய Triluminos தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பமானது அதிக துள்ளியமானதும், வர்ணங்களை இயற்கையாக காட்சிப்படுத்தக்கூடியதுமென சொனி தெரிவிக்கின்றது.

இது தவிர 8 மெகா பிக்ஸல் கெமரா, 2 மெகா பிக்ஸல் பின் கெமரா ஆகியனவற்றையும் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா கொண்டுள்ளது.

இதுவும் சொனியின் Xperia z ஐப் போல நீர் மற்றும் தூசியினால் பாதிப்படையாது. இதனூடாக நீருக்கு அடியிலும் படங்களை எடுக்க முடியுமென்பது மேலதிக சிறப்பு.

இவ்வருடத்தின் இறுதிக்காலாண்டுப் பகுதியில் இது சந்தைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply