Home » அதிசய உலகம் » பயணம் செய்வதற்கு அஞ்சுவதால் அபுதாபியில் நிர்க்கதியாகியுள்ள பிரித்தானிய சிறுவன்

பயணம் செய்வதற்கு அஞ்சுவதால் அபுதாபியில் நிர்க்கதியாகியுள்ள பிரித்தானிய சிறுவன்

thomsonபிரிட்­டனைச் சேர்ந்த 12 வய­தான சிறு­வ­னொ­ருவன் அபு­தா­பிக்கு சுற்­றுலா மேற்­கொண்­டுள்ள நிலையில், பயணம் செய்­வ­தற்கு அஞ்­சு­வதால் மீண்டும் பிரிட்­ட­னுக்கு திரும்ப முடி­யாமல் ஒரு­வ­ருட கால­மாக ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நிர்க்­க­தி­யா­கி­யுள்ளான்.

ஜோ தொம்ஸன் எனும் இச்­சி­றுவன் கடந்த வருடம் தனது பெற்­றோ­ருடன் அபு­தா­பிக்குச் சென்றான். கடந்த வருடம் ஜூன் மாதம் இச்­சி­றுவன் திரும்­ப­வி­ருந்தான். எனினும், மீண்டும் விமா­னத்தில் பயணம் செய்­வ­தற்கு அஞ்­சு­வ­தாக அச்­சி­றுவன் தெரி­வித்­ததால் ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸி­லி­ருந்து வெளி­யேற முடி­யாமல் உள்ளான்.

இச்­சி­று­வ­னுடன் தாயகம் திரும்­பு­வ­தற்கு அவனின் பெற்றோர் நான்கு தட­வைகள் விமான நிலை­யத்­துக்குச் சென்­றனர். ஆனால், ஒவ்­வொரு தட­வையும் அவன் விமா­னத்தில் ஏறவே முடி­யாது என அடம்­பி­டித்து கண்ணீர் விட்டு அழுதான்.

பின்னர் தரை­வ­ழி­யா­கவோ கப்பல் வழி­யா­கவோ பயணம் செய்­வ­தற்கும் மறுப்பு தெரி­வித்தான். அதனால் அவன் தனது தந்தை டொனி தொம்­ஸ­னுடன் சுமார் ஒரு வரு­ட­மாக அபு­தா­பியில் தங்­கி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

63 வய­தான டொனி தொம்ஸன் தனது மக­னுடன் அபு­தா­பியில் தங்­கு­வ­தற்கு மாதாந்தம் சுமார் 3000 ஸ்ரேலிங் பவுண்­களை செல­வி­டு­வதால் வங்­கு­ரோத்­தாகும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளார்.

எந்த வகை­யான பய­ணத்­துக்கும் மறுப்பு தெரிவிக்கும் ஜோ தொம்ஸனின் அச்சத்துக்கான காரணத்தை உளவியல் நிபுணர்கள் கண்டறியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply