Home » இது எப்படி இருக்கு? » மகளுக்காக இளம் பெண்களின் ஆடை அணிந்து பரீட்சை எழுதிய 52 வயது தாய் கைது

மகளுக்காக இளம் பெண்களின் ஆடை அணிந்து பரீட்சை எழுதிய 52 வயது தாய் கைது

examதனது மகளுக்காக 52 வயதான தாயொருவர் இளம் பெண்கள் அணியும் ஆடை மற்றும் காலணி அணிந்துகொண்டு பரீட்சை எழுதி கைதான சம்பவமொன்று பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.

பாரிஸிலுள்ள உயர்நிலை பாடசாலையொன்றிலேயே நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த தாய் தனது மகள் அணியும் உடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து ஆங்கில பரீட்சை எழுதியுள்ளார். ஆனால் யாரும் இவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் அவர் பரீட்சை எழுதிய அறைக்குள் வந்த பரீட்சை கண்காணிப்பாளர் குறித்த தாயை அடையாளம் கண்டுள்ளார். பரீட்சை எழுதிய தாயின் 19 வயது மகளை ஏற்கனவே தத்துவவியல் வினாத்தாள் எழுதும் போது அவதானித்துள்ளார் இந்த கண்காணிப்பாளர்.

பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து குறித்த தாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸார் கூறுகையில், இளம் பெண்கள் அணியும் ஆடைகளை சாதராணமாக அணிந்து பரீட்சை எழுதியுள்ளார். பரீட்சை முடிவடையும் நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். இதனால் ஏனைய பரீட்சார்த்திகளுக்கு தொந்தரவு எதுவும் ஏற்படவில்லை. மேலும் விசாரணையின் போது மகளை விட தான் ஆங்கிலத்தில் சற்று புலமை அதிகம் என்பதாலேயே இவ்வாறு பரீட்சை எழுதியதாக தெரிவித்தார்.

இதேவேளை தனக்கு பதிலாக தாயை, தேர்வு எழுத செய்த 19 வயது மகள் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து பொதுப் பரீட்சைகள் எழுத முடியாதவாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது தாய்க்கு இலங்கை மதிப்பில் 1.4 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply