Home » அதிசய உலகம் » கார் விபத்தில் சிக்கிய பின் ப்ரெஞ் மொழி பேசும் ஆங்கிலப் பெண் : இட் இஸ் எ மெடிக்கல் மிரேக்ல்

கார் விபத்தில் சிக்கிய பின் ப்ரெஞ் மொழி பேசும் ஆங்கிலப் பெண் : இட் இஸ் எ மெடிக்கல் மிரேக்ல்

frenchஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆங்கில மொழி பேசும் பெண்ணொருவர் கார் விபத்தொன்றின் பின்னர் ப்ரெஞ் மொழி பேசும் அதியசமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் லீன் ரோவ் என்ற பெண்ண்ணே இவ்வாறு அதிசயமாக ப்ரெஞ் மொழி பேசுகிறார்.

லீன் வீதியில் நடந்து சென்ற போது கார் ஒன்றுடன் விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன் போது தலையில் பலத்த காயமடைந்துள்ளார். பின்னர் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிசிக்சைகளின் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஓரு வாரத்தின் பின்னர் சுயநினைவு பெற்று எழுந்த லீன் ரோவ் சற்றும் எதிர்பாராத விதமாக அவரது தாய் மொழியான ஆங்கிலம் பேசுவதற்கு பதில் ப்ரெஞ் மொழியில் பேசியுள்ளார். இதனால் அவரது உறவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து, அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் கூறுகையில், ‘தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ஆங்கிலம் மறந்து போயிருக்கலாம். எங்கள் அனுபவத்தில், இது போன்ற சம்பவத்தை கண்டதில்லை’ என குழப்பத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

ப்ரெஞ் மொழியில், சிறிதும் அறிமுகம் இல்லாத லீன் ரோவ், எவ்வாறு அந்தமொழியில் பேச முடியும்’ என, உறவினர்களும் குழப்பமடைந்துள்ளனர்.

இதைத்தான் இட் இஸ் எ மெடிக்கல் மிரேக்ல் என்று சொல்லுவாங்களோ!

Leave a Reply