உலகின் முதலாவது பறக்கும் காரை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தரையிலும் வானிலும் பயணிக்கக்கூடிய இக்கார் 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந் தது.
அமெரிக்காவைச் சேர்ந்த மோல்ட்டன் டெய்லர் என்பவர் இக்காரை வடிவமைத்தார். இக்கார்களில் நான்கு மாத்திரமே தற்போதும் உலகில் உள்ளதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் அவற்றில் ஒரு காரை ஏத்தில் விற்பனை செய்தவற்கு அதன் தற்போதைய உரிமையாளர் தீர்மானித்துள்ளார்.
இக்கார் ஆரம்பத்தில் 25,000 டொலர்களுக்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 9.3 லட்சம் டொலர்களுக்கு (சுமார் 12 கோடி ரூபா) விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
21 அடி நீளமான இந்த பறக்கும் கார், மணத்தியாலத்துக்கு 177 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடியது.