Home » கொறிக்க... » கட்டுரைகள் » உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன்

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன்

huawei-ascendஉலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போனை சீனாவின் ஹூஹாவி அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை ஹூவாவி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வெறும் 6.18 மில்லிமீற்றர் தடிப்பானது என ஹூஹாவி தெரிவிக்கின்றது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன் எனவும் ஹூஹாவி குறிப்பிடுகின்றது.

Huawei’s Ascend P6 என அழைக்கப்படும் இம்மாதிரி 4.7 அங்குல எல்.சி.டி. திரை. , 1.5GHz quad-core CPU மற்றும் 2GB RAM ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அண்ட்ரோய்ட் ஜெலி பீன் மூலம் இயங்குகின்றது.

இதுமட்டுமன்றி 8 மெகா பிக்ஸல் ரியர் கெமராவைக் கொண்டுள்ளதுடன் 5 மெகா பிக்ஸல் முன் கெமராவையும் கொண்டுள்ளது.

தொலைத்தொடர்பாடல் சாதனங்களைத் தயாரிப்பிலும் ஈடுபடும் ஹூஹாவி நிறுவனமானது ஸ்மார்ட் போன் சந்தையிலும் பிரபல்யம் பெற முயன்று வருகின்றது.

சீனாவில் நுகர்வோரிடையே நன் மதிப்பை பெற்றுள்ள ஹூஹாவி நிறுவனமானது உலக சந்தையில் ஏற்கனவே பல ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ள போதிலும் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஹூஹாவி நிறுவனம் நொக்கியாவை கொள்வனவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்மார்ட் போன் சந்தையில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நொக்கியாவை கொள்வனவு செய்ய ஆர்வமாக உள்ளதாக ஹூவாவி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இச் செய்தியானது காட்டுத் தீ போல பரவியதுடன் நொக்கியாவில் பங்குகளின் விலையும் சற்று உயர்வைக் காட்டியிருந்தது.

எனினும் ஹூவாவி நிறுவன அதிகாரியின் கருத்துக்கு நொக்கியா பதிலளிக்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply