பெண்களுக்காக செலவு செய்யாத ஆண்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?
ஆம்பிள்ளை என்று நிரூபிக்க உன்னிடம் வேறு எதுவுமே இல்லையா?
பெட் காஃபி வேண்டும் என்றால் சமையல் அறையில் தூங்கு!
தீய்ந்த வாசனை வருகிறதா? சமையல் ரெடி என்று அர்த்தம்!
ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டுதான். ஆனால் அது அவர்கள் பிரச்னை!
நீ போய்த் தொலைந்தால்தானே நான் உன்னைப் பிரிந்து ஏங்க முடியும்?
செத்த பிறகு ஆண்கள் எல்லாரும் சொர்க்கத்துக்கும் பெண்கள் எல்லாரும் நரகத்துக்கும் போனால் என்ன ஆகும்? சொர்க்கம் நரகமாகும், நரகம் சொர்க்கமாகும்!
புத்திசாலி ஆண்கள் முட்டாள் பெண்களைக் காதலிப்பதுண்டு. ஆனால் புத்திசாலிப் பெண்கள் முட்டாள் ஆண்களைக் காதலிப்பதில்லை.
ஆண்கள் ஏன் பெண்களின் கண்ணைப் பார்த்து பேசுவதில்லை? ஏனென்றால் அவர்கள் பார்க்கும் இடத்தில் இருப்பவை கண்கள் இல்லை!
என் சமையலைக் குறை சொல்லாதே! அப்புறம் நான் உன்னிடம் `வேறு எதிலாவது’ குறை சொல்வேன்!