Home » கொறிக்க... » கட்டுரைகள் » பாயும் நதிகள் மீது தொடரும் சர்ச்சைகள்

பாயும் நதிகள் மீது தொடரும் சர்ச்சைகள்

seeஒவ்­வொரு உயிரும் உலகில் உயி­ருடன் வாழ ஒட்­சிசன் என்ற வாயுவை நம்­பி­யி­ருக்க வேண்டி இருக்­கின்­றது. ஆனாலும் சுவா­சித்து உயிர் வாழ வழி­செய்யும் அந்த மூச்சுக் காற்று உண்­மை யில் யாருக்கு சொந்தம்? அது போலவே நீரூம் அமைந்­தி­ருந்தால் என்ன என எண்ணத் தோன்­று­கின்­றது.

ஏனெனில் நிலங்­களைத் துண்­டா­டிய மனி­தர்­களால் நதி­க­ளையும் அதில் பாயும் நீரையும் பிரிக்க முடி­யாமல் அவற்றின் மீதான சர்ச்­சை­க­ளினால் பல்­வேறு நாடு கள் பிரிந்து சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வதே மேற்­படி எண்ணம் உதிக்க கார­மா­கின்­றது.

பூமி­யில் குறித்த சில காலப்­ப­கு­தி­களில் கண்­டங்கள், நாடுகள் என மனி­தர் ­களின் அர­சியல் ஆசைகள், நிலத்தின் மீதான மோகம் மற்றும் வேறு பல தேவை­க­ளாலும் புவி­யி­ல­மைந்த நிலங்கள் துண்­டா­டப்­பட்­டன.

இருப்­பினும், நிலத்தை சொந்­த­மாக்கி எல்­லைக்­கோ­டிட்டு பிரிக்க முடிந்­தாலும், எல்லைக் கோடு­களைத் தாண்டி பாயும் ஆறு­களை சாதா­ர­ண­மாக மனி­தனின் ஆசைக்கு சாத­க­மாக பிரித்­திட முடி­ய­வில்லை. இதனால் நாடுகள் பல ஒன்­றி ­ணைந்து காணப்­பட்­ட­போது எமது நாட்டின் நதி­யாக இருந்­தது. அதுவே நாடுகள் பிரிந்­ததும் எனது நாட்டு நதி­யென உரிமை கோர வேண்டி ஏற்­பட்­டது. இதுவே நதிகள் மீதான சர்ச்­சைக்கு வித்­திட்­டது.

தற்­போது உல­களில் முக்­கிய பிரச்­சி­னை­களில் ஒன்­றாக தோற்றம் பெற்­றுள்­ளது நீர். எனவே ஜீவ­ந­தி­களை யாரும் யாருக்கும் விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ரில்லை. விளைவு நாடு­க­ளி­டையே சச்­ச­ர­வு­க­ளையும் சண்­டை­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கி­றது.

இனி ஓர் உலகப் போர் ஏற்­ப­டு­மே­யானால் அது நீருக்­கான ஒரு போரா­கவே இருக்­குமே அன்றி வேறு எதற்­கா­கவும் அல்ல என கடந்த 20 ஆண்­டு­க­ளாக சுற்­றுச்­சூழல் அறி­வி­ய­லா­ளர்­களும் சமூக அறி­ஞர்­களும் கூறி­வ­ரு­கின்­றார்கள். உண்­மையில் இதற்­கான அறி­கு­றிகள் பெரிய அளவில் இன்று காணப்­ப­டு­கி­றது.

முன்­னொரு காலத்தில் கோடை காலங்­களில் வீட்­டு­க­ளுக்கு வெளியே குடங்­களில் நீர் நிரப்பி வைப்­பார்­களாம் தாகத்தில் வரும் வழிப்­போக்­கர்­க­ளுக்­காக. இன்றும் வீடு­க­ளுக்கு வெளியே குடங்கள் உள்­ளன. ஆனால் இவை எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருப்­பது வழிப்­போக்­கர்­களை அல்ல நீரின் வரு­கையை.

இது வீடு­க­ளுக்கு மட்­டு­மல்ல நாடு­க­ளுக்கும் பொருத்­த­மாக இருக்கும். 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்­கையில் ‘அனை­வ­ருக்கும் போது­மான நீர் உள்­ளது’ எனத்­தெ­ரி­வித்­தி­ருந்­தது. ஆனாலும் தவ­றான நிர்­வாகம், அர­சியல் பின்­ன­ணியே தனி நப­ருக்­கான நீரின் அளவை மட்­டு­ப­டுத்­து­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இத­னா­லேயே பல்­வேறு நாடு­க­ளுக்கு குறுக்­காக பாயும் நதி­க­ளினால் உரு­வான சர்ச்­சைகள் பூதா­க­ர­மாக மாறி வரு­கின்­றது.

இந்­தியா என பெயர் வரக் கார­ண­மாக அமைந்த சிந்து நதியே இன்று பாகிஸ்­தானில் தானே பாய்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இந்ந நதி காஷ்மீர் ஊடா­கவும் செல்­கின்­றது. காஷ்­மீரில் ஓடும் முக்­கிய 6 நதி­களில் 3 நதிகள் இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்டில் உள்­ளன. மீதி 3 நதி­க­ளுக்­காக இரு நாடு­களும் முட்­டிக்­கொண்­டுதான் இருக்­கின்­றன.

மேலும் தைக்ரீஸ், யூப்­ரடீஸ் நதி­களால் துருக்­கிக்கும் சிரி­யா­வுக்­கு­மி­டையே என பல நாடு­க­ளி­டையே நதி­க­ளுக்­காக பிரச்­சி­னைகள் நில­வு­கின்­றன. இதில் பிர­தா­ன­மாக குறிப்­பி­டக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான நதி­யாக விளங்­கு­வது உலகின் அதி நீள­மான நைல் நதியும் ஒன்­றாகும்.

ஆபி­ரிக்­காவின் பல நாட்டு வயல்­க­ளுக்குச் செழிப்பும், மனி­த­ருக்கு உயிரும் ஊட்­டு­வ­துடன், எகிப்தின் நாக­ரிக வளர்ச்­சிக்குப் பல்­லா­யிரம் ஆண்­டுகள் உறு­து­ணையும் புரிந்த உலகின் அதி நீள­மான நைல் நதிக்­கா­கவும் குறித்த நாடு­க­ளி­டையே பல வரு­டங்­க­ளாக பிணக்­குகள் காணப்­பட்டு வரு­கின்­றது.

66670 கி.மீ நீள­மான இந்த ஜீவ­ந­தியில் 11 நாடுகள் தங்­கி­யுள்­ளன. ஆனாலும் சூடான், புருண்டி, ருவாண்டா, கொங்கோ, தன்­சா­னியா, கென்யா, உகண்டா, எத்­தி­யோப்­பியா, எகிப்து ஆகிய 9 நாடு­களே பெரு­ம­ளவில் ஆதிக்கம் செலுத்­து­கின்­றன. இதில் குறிப்­பாக நைல் நதியின் பிர­தான நீர் மூலத்­தினை எகிப்து மற்றும் சூடான் ஆகிய இரு நாடுகள் பெறு­கின்­றன.

ஆனால் நதியின் இரு பிரி­வு­க­ளான வெள்ளை நைல் மற்றும் நீல நைல் ஆகிய இரண்டு பகு­திகள் முறையே கிழக்கு ஆபி­ரிக்கா (றுவண்டா அல்­லது புருண்டி) மற்றும் எத்­தி­யோப்­பியா ஆகிய இடங்­களில் உற்­பத்­தி­யா­கின்­றது.

இதனால் மின்­சாரம், வயல் நிலங்­க­ளுக்­கான நீர் என முதன்­மை­யான நீர் தேவை­களை அதி­க­ளவில் எகிப்தும் சூடானும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

இந்­நி­லையில் நீல நதியின் குறுக்­காக அணை ஒன்­றினை மின் உற்­பத்­திக்­காக அமைப்­ப­தற்கு எத்­தி­யோப்­பியா நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. இதன் ஒரு அங்­க­மாக கடந்த வாரம் அணை கட்­டப்­ப­ட­வுள்ள குறி­த்த நதி ஓடும் திசையை மாற்றும் வேலை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இத்­திட்­டத்­திற்கு இத்­தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவி செய்­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. இதனால் உலக நாடு­களே இந்த அணையை கட்ட உத­வு­வ­தனால் இத்­திட்­டத்­திற்கு தனது எதிர்ப்­பினை தெரி­விக்கும் முக­மாக முக்­கிய கடல் மார்க்­க­மான பாதை­களில் ஒன்­றான சுயஸ் கால்­வாயை மூடி போக்­கு­வ­ரத்துத் தடையை ஏற்­ப­டுத்த எகிப்து தீர்மானித்துள்ளது.

இவ்வாறு சுயஸ் கால்வாயை மூடும் பட்சத்தில் கடல் மார்க்கமான போக்கு வரத்துகள் சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சர்வதேச நாடுகளிடையே பிணக் குகள் உருவாக வாய்ப்பாகலாம் என பர வலான கருத்துகள் வெளியாகின்றன. இது போலவே ஏனைய நதிகளுக்கான போராட்டங்களும் நாடுகளுக்கிடையில் பாரியளவில் வெடிக்கலாம்.

ஆனாலும் நதிகள் பாய்கின்ற அதே வேகத்தில் சர்ச்சைகளும் பாய்ந்து கொண் டேதான் இருக்கிறது.

– அமானுல்லா எம். றிஷாத்

Leave a Reply