* எப்பொழுதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்கள்.
* ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் “நெய்ல் பாலிஷ்”-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.
* காதலுக்கு உண்மையான சாவி எதுன்னா? அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான். அதனால் வாழ்க்கையை பொருத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? அப்படின்னு முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க…
* உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைங்க. அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது “டேட்டிங்” போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.
* ஏன்னா சில பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க தங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க. அதனால எந்த நேரத்திலும் அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்துகிட்டு உங்க காதலியை முழுமையாக தெரிஞ்ச்சு வைச்சுக்கங்க.
* இன்னொரு விஷயங்க… தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல, அப்படின்னா… அவங்க ரொம்பவே “டல்” ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. பொறுமையா காதுல வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்ச வைச்சு அதை செயல்படுத்துறதுக்கு தொடங்குங்க.
* என்னங்க! இப்பவே ரெடி ஆய்ட்டீங்க போல!!!