பாப்பரசரிடம் ஆசி பெறுவதற்காக உலகின் பல பாகங்களிலிருந்தும் பக்கதர்கள் வத்திக்கானுக்குச் செல்வது வழக்கம். ஆனால் நேற்றுமுன்தினம் வித்தியாசமான குழுவொன்று பாப்பரசர் முதலாம் பிரான்சிஸிடம் ஆசி பெறுவதற்காக வத்திக்கானுக்குச் சென்றிருந்தது.
“ஹார்லி டேவிட்சன்’ எனும் மோட்டார் சைக்கிள் அபிமானிகள் குழுவொன்று பாப்பரசரிடம் நேற்றுமுன்தினம் வத்திக்கானுக்குச் சென்றது.
அமெரிக்காவைத் தளமாக்க கொண்ட உலகப் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சனின் 110 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இக்குழுவினர் பாப்பரசரிடம் ஆசி பெற்றது. நூற்றுக்கணக்கானோர் கொண்ட இக்குழுவினர் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மூலமே வத்திக்கானுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இக்குழுவினர் பாப்பரசருக்கு இரு மோட்டார் சைக்கிள்களையும் லெதர் ஜக்கெட் ஒன்றையும் பரிசளித்தனர்.