Home » இது எப்படி இருக்கு? » நண்பனின் தாயுடன் பாலுறவுகொண்டு தந்தையான 11 வயது சிறுவன்

நண்பனின் தாயுடன் பாலுறவுகொண்டு தந்தையான 11 வயது சிறுவன்

boyநியூஸிலாந்து நாட்டில் 11 வயதான சிறுவன் ஒருவன், அவனது பாடசாலை நண்பனின் 36 வயதான தாயுடன் உறுவுகொண்டு தந்தையான விடயம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியுஸிலாந்தின் ஒக்லேண்ட் நகரில் வசிக்கும் சிறுவன் ஒருவனும் ஒரு பெண்ணுமே குறித்த விடயத்தில் சம்மந்தப்பட்டவர்களாவர். பல்வேறு காரணங்களால் இவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

நீங்கள் என்னைப் பற்றி மகிழ்ச்சியுற மாட்டீர்கள். நான் எனது நண்பனின் தாயுடன் கடந்த வருட இறுதியில் பாலுறவு வைத்துக்கொண்டேன். இதனை நிறுத்த வேண்டும் என அச்சிறுவன் என்னிடம் தெரிவித்தான் என சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.

தற்போது குறித்த சிறுவனுக்கு 12 வயதாகின்றது. இது தவிர மேலதிக தகவல்கள் எதனையும் அக்கல்லூரி நிருவாகமோ அல்லது அந்நாட்டு பொலிஸாரோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நியூஸிலாந்தின் சட்டத்தின் பிரகாரம் பாலியல் வல்லுறவு மேற்கொள்ளும் ஆண்களுக்கே அதிக பட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும். இதனால் குறித்த பெண்ணால் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும். எனவே அந்நாட்டின் பாலியல் வல்லுறவு குறித்த சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் வலுத்துள்ளது.

Leave a Reply