துபாய்: ‘துபாய் கேர்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம், ஏழை நாடுகளில் வாடும் குழந்தைகளின் கல்விக்காக அதிக இயற்கை தாதுக்கள் நிறைந்த வாட்டர் பாட்டில் ஒன்றை ஏலத்தில் விட்டுள்ளது. குபாயில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான ‘துபாய் கேர்ஸ்’, குழந்தைகளின் கல்விக்காக அதிக நிதியுதவி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஏழை நாடுகளில் வாழும் குழந்தைகள் மீது அதிக அக்கறையுடன் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்த்ஹில், அதிக இயற்கைத் தாதுக்கள் நிரம்பிய ‘மாசாபி’ என்ற 1.5 லிட்டர் வாட்டர் பாட்டிலை ஆன்லைனில் ஏலத்தில் விட்டுள்ளது துபாய் கேர்ஸ். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கல்வித் தொண்டிற்காக செலவிடப்போவதாக முன்கூட்டியே துபாய் கேர்ஸ் அறிவித்து விட்டதால் இந்த வாட்டர் பாட்டிலை வாங்க கடும் போட்டி நிலவுகிறது. ரூ 24க்கு தொடங்கிய ஏலம், சில நாட்களுக்கு முன்னர் ஒரு லட்ச ரூபாயில் வந்து நின்றது.இம்மாதக் கடைசி வரை இந்த ஏலம் நடைபெறும் என்பதால் ஏலத்தொகை உயர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட இருக்கும் வாட்டர் பாட்டில் இதுவாகத்தானிருக்கும் என ஏல நிறுவனத்தினர் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.