அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த 4 வயதான சிறுவனொருவன் தவறுதலாக அவனது சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜஸ்டின் தோமஸ் என்ற 35 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் வீட்டினுள் இருந்த துப்பாக்கியை எவ்வாறோ எடுத்துள்ளான். பின்னர் அதனை வைத்து விளையாடிக்கொண்டிருக்கையில் அது தவறுதலாக வெடித்ததில் குண்டு ஜஸ்டினைத் தாக்கியுள்ளது.
தொடர்ந்து விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். இருப்பினும் வைத்தியசாலையில் வைத்து ஜஸ்டின் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.
அமெரிக்காவில் இவ்வாறான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமையினால் துப்பாக்கி தொடர்பான கடும் சட்டங்களை அந்நாட்டு அரசு அமுல்படுத்தி வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.