Home » ஜோக்ஸ் » சிக்கன் சிரிப்பு

சிக்கன் சிரிப்பு

ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ?

சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான்

மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க !

கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல மட்டும் நல்லா பாரு, நாட்டு நடப்ப புரிஞ்சிக்காதே !

கஸ்டமர்: என்ன பாய், சீக்கு வந்த கோழி மாதிரி டல்லா இருக்க ?

கறிக்கடை பாய்: ஓசில லெக் பீஸ்கேப்பியே, முழு கோழி இருக்கு வாங்க்கிருயா?
கஸ்டமர் ஓட்டமெடுக்கிறார்.

நோயாளி: டாக்டர், சிக்கன் லெக் சாப்டதுலேர்ந்து, கலுத்தெல்லாம் நீண்டு ஒரு கொக்கரக்கோவா வருது டாக்டர்.

டாக்டர்: நீங்க வெட்னரி டாக்டரைதான் பார்க்கனும், பயப்படத்தேவையில்லை, தொடைய சுத்தி சுத்தி தொன்னூறு ஊசி போடுவாங்க

முனியான்டி விலாஸ் ஓனர்: எதுக்கு என்னை அரஸ்ட் பண்ணுரிங்க சார் ?

போலிஸ்: ஏன்யா, சிக்கன பார்த்து ஊரே ஓடிக்கிட்டு இருக்கு, நீ என்ன தெனாவட்டா, இங்கு சிக்கன் சிக்ஸிடி பைவ் கிடைக்கும்னு போர்ட மாட்டிவைச்சிருப்ப !

மந்திரி: எங்கள் தலைவர், ஒரு லட்சம் கோழிகளை அழித்து சிக்கன நடவடிக்கை எடுத்திருக்கிறார், தலைவர் வாழ்க.

உதவியாளர் மெதுவாக: தலைவா சொதப்பிட்டியே, அது சிக்கன நடவடிக்கை இல்ல தலைவா, சிக்கன் மீது நடவடிக்கை !

கோழி 1: ஏன்டா, ரொம்ம சந்தோசமா கூவுர ?

கோழி 2: நம்ப கண்ணு முன்னேடியே, நம்ம ளுங்கள அறுப்பாங்கல்ல, இனி கொஞ்ச நாள், புள்ள குட்டியோட சந்தோசமா இருக்கலாம்

பாரி: ஏன்டா, கோழி வருத்துன்னு கோட்வேர்ட்ல சொன்ன ஜொள்ளுவடிய நிப்பானே, நம்ம சுந்தர் ஏன்டா, அவுங்க அப்பனா பாத்தாப்பல ஓடுறான் ?

மாரி: முன்னடி, கோழின்னு பிகருங்களைத்தான் சொல்லுவோம், இப்ப கோர்டு வேர்டு, பேர்ட் வோர்டா மாறிடுச்சி, அதான் புளு வந்துடுமே பயந்து ஓடுறான்.

வாத்தியார்: பசங்களா, ‘கூறை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் …’  எங்க பழமொழியை முடிங்க பார்க்கலாம்..

சுட்டி பையன்: சார், கோழிய புடிச்சா உடனே வைகுண்டம் தானாம், எங்க அப்பா சொன்னாரு !

கமலா: விமலா, என்ன ஒங்க மாமியாரு, திடீர்னு போய்டாங்களா, எப்படிடி ?

விமலா: இதான் சரியான சமயம்னு, சிக்கன் வருவல் செஞ்சிபோட்டேன், அவுங்க சை சையா சாப்பிட்டு போய்டாங்க!

புறா: எறும்பு நண்பா, எப்படி நீ வேடனை கடிக்காமல், என்னை காப்பாற்றினாய் ?

எறும்பு: உனக்கு பறவை காய்சல் இருக்குன்னு சொன்னேன், அதான் தலை தெறிக்க ஓடிட்டான்.

கோவி.கண்ணன், சிங்கப்பூர்-

Leave a Reply