ஒருவரின் வாழ்க்கையை மிகவும் அழகாக்குவது காதல் தான். அதிலும் வாழ்க்கைத் துணையாக வருபவர்கள், சிறந்தவராகவும் நன்கு புரிந்து கொள்பவராகவும் இருந்துவிட்டால், அதைவிட அழகான வாழ்க்கை வேறு எதுவும் கிடையாது. அனைவருமே தனக்கு வருபவர், இவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டு மனதில் வைத்திருப்பார்கள்.
அத்தகைய எதிர்பார்ப்பு உள்ளது போல் கிடைத்துவிட்டால், அதைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது என்றெல்லாம் தோன்றும். இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே எதிர்பார்ப்புகள் நிச்சயம் இருக்கும். அதிலும் காதல்/திருமணம் என்று வந்துவிட்டால், கண்டிப்பாக இருக்கும். இப்போது அனைவரது மனதிலும் இருக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் சிலவற்றை என்னவென்று பார்ப்போமா!!!
அனைவரது மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகளில் முக்கியமானது காதல் தான். தனக்கு வருபவர் தன் மீது சொல்ல முடியாத அளவிலும், என்றும் மறக்க முடியாத அளவிலும் காதல் செய்ய வேண்டும். மேலும் அத்தகைய காதலை அழகான வழியில் வெளிப்படுத்தி, இருவருக்குள் இருக்கும் உறவை நன்கு வலுபடுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
நல்ல புரிதல் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே துணையாக வருபவர், தன்னை, தன் ஆசை, விருப்பம் போன்றவற்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
நல்ல ஆரோக்கியமான உறவில், கணவன் மனைவி/ காதலர்கள் இருவருக்கும், ஒருவர் மீது ஒருவர் நல்ல அக்கறையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையானது இருக்கும். இந்த உணர்வு அனைவருக்கும் பொதுவாக இருப்பவையே. இத்தகைய அக்கறையை தமக்கு வரும் துணை, நம்மீது வைத்திருந்தால், வாழ்வில் எத்தகைய கஷ்டம் வந்தாலும், தம்மை பார்த்துக் கொள்ள ஒருவர் உள்ளார் என்ற எண்ணத்தில் மன உறுதியுடன் செயல்பட்டு நன்கு முன்னேற முடியும்.
உறவுகளில் மிகவும் முக்கியமானவைகளில் ஒன்று தான் நம்பிக்கை. ஒருவர் மீது நம்பிக்கை இருந்தால், வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் நிலைக்கும். அதுவே கொஞ்சம் குறைந்ததாலும், அவை வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். எனவே அனைவரும் தனக்கு வரும் துணை தம் மீது முதலில் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.
ஒவ்வொருவருமே தன் துணையிடம் ஒருவித மரியாதையை எதிர்பார்ப்பார்கள். அதிலும் அத்தகைய மரியாதையானது, தனக்கு வரும் துணை ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டுமெனில் அதற்கு தன்னையும் மதித்து, கலந்தாலோசித்து பின் எடுக்க வேண்டும் என்றது தான்.
இரு உள்ளங்களையும் பிரியாமல் வாழ்நாள் முழுவதும் இணைப்பதில் ரொமான்ஸ் முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த ரொமான்ஸ் தான் ஒருவரின் எனர்ஜி என்று சொல்லலாம். இத்தகைய எதிர்பார்ப்பு நிச்சயம் அனைவரது மனதிலும் இருக்கும்.
பாராட்டு பெறுவது அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அத்தகைய பாராட்டுக்களை தனக்கு வரும் துணையின் வாயினால் பெற்றால், அது ஒருவரின் சுயமரியாதையை மேலும் வலுப்படுத்தும். இதுவும் எதிர்பார்ப்புக்களில் ஒன்றாகும்.
கணவன் மனைவியாக இருந்தாலும், அதில் ஒரு நட்பு இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால், அது தான் என்ற அகங்காரம் மற்றும் அடிக்கடி ஏற்படும் பெறும் மோதல்களை தவிர்க்க உதவியாக இருக்கும். மேலும் யாராக இருந்தால், தனது கஷ்டம், சந்தோஷம் போன்றவற்றை நண்பர்களிடம் தான் பகிர்ந்து கொள்ளோம். அத்தகைய ஒரு நல்ல நண்பனாக இருந்தால், மனதில் நினைப்பது தவறோ சரியோ அனைத்தையும் மனம் விட்டு பேச வெளிப்படையாக முடியும்.
ஒருவரின் கனவு மற்றும் கற்பனைக்கு இவ்வுலகில் பஞ்சமே இல்லை. அதிலும் தனக்கு வாழ்க்கை துணையாக வருவோரைப் பற்றி எத்துனை எதிர்பார்ப்புகள் இருந்தால், மேற்கூறியவை மிகவும் அடிப்படையானது. எனவே இதனை புரிந்து கொண்டு, செயல்பட்டால், வாழ்க்கையானது சந்தோஷமாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.