Home » கொறிக்க... » கட்டுரைகள் » ஆயுள் முழுவதும் மனைவியின் அரவணைப்பை தேடும் ஆண்கள்! – ஆய்வு முடிவு

ஆயுள் முழுவதும் மனைவியின் அரவணைப்பை தேடும் ஆண்கள்! – ஆய்வு முடிவு

bhavana

செக்ஸ் தேவைக்காகவும், பெண்களைக் கவர்வதற்காகவும் ஆதிகால மனிதன் முதல் இந்த காலத்திய ஆண்கள் வரை எத்தனையோ வீர தீர செயல்களை செய்து தங்களைநிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் ஆண்களுக்கு நஷ்டம் எதுவும் இல்லை லாபம்தான் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபணுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர்.

தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றியடைந்து, விரும்பிய பெண்ணை அடைவதன்மூலம், குறைந்தபட்சம் அவன் சந்ததி தொடரும்/வளரும் வாய்ப்பையாவது உருவாக்கிவிடுகிறான் ஆண். அதன்பின் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல காரணம் அவன் சந்ததி உருவாகிவிட்டது!

ஒரு தந்தை இல்லாத குழந்தையின் கல்வியும், சமுதாயத்தில் வெற்றியும் கேள்விக்குறியாகலாம். ஆனால், ஒரு தாயில்லாக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது. அதனால்தான் பெண்கள் ஆண்களைப்போல, காதலுக்காக உடல் ரீதியிலான, ஆபத்தான வீர தீரச் செயலகளிலெல்லாம் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள் என்று கூறியுள்ளார் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆன்னி கேம்பெல். ஆனால், இதற்கு நேர் எதிராக இருக்கும் ஆண்கள், தனக்குப் பிடித்த அழகான பெண்களை எப்படியாவது ஈர்த்துவிட வேண்டி ஏதாவது ஒரு ஆபத்தான செயலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்!

ஆதிகாலத்தில் வேட்டையாடி உணவு கொண்டுவந்து தன்னை காப்பாற்றிய ஆணையே சிறந்த ஆண்மகனாக, உறவுக்கு ஏற்றவர்களாக பெண்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவனது சந்ததியை பரப்பவே பெண்களும் விருப்பம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.

குழந்தைப் பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு என்னும் இரு உடலுழைப்பு சார்ந்த பொறுப்பை ஏற்கவேண்டிய பெண்கள், பொறுப்பான அல்லது திறமைமிக்க ஆண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரியும் இங்கே பொறுப்பு என்பது சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும் பொருட்செல்வம் என்னும் இரு அளவுகோள்களால் கணிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் க்ரூகர்!

எனவேதான் இன்றைக்கும் க்ரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பணமதிப்பு, கவுரமான வேலை ஆகியவற்றைக் காட்டி பெண்களை கவரும் முயற்சியில் ஆண்கள் ஈடுபடுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதேபோல் மரணம் வரையிலும் ஆரோக்கியத்தைப் பொறுத்து உறவு கொள்வதை பெரும்பாலான ஆண்களும் பெண்களும் விரும்புகின்றனர். இது தொடர்பான இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 75 முதல் 85 வயதுடைய நபர்களும் பங்கேற்றனர். ஆய்வின் போது அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வாரத்திற்கு ஒருமுறை தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதிகள் ஆரோக்கியமாகவும், சுறுப்பாகவும் காணப்படுவதாக தெரிவித்தனர். அதேசமயம் உறவில் ஈடுபடாத தம்பதிகள் உடல் சோம்பியிருப்பதாக கூறினர்.

30 வயதில் உறவில் ஈடுபடும் தம்பதியரை விட 55 வயதில் உறவில் ஈடுபடும் தம்பதியர் உடல் ஆரோக்கியம் சீராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது தெரியவந்தது. வயதானாலும் இறுதி காலம் வரை ஆரோக்கியத்தைப் பொருத்து உறவில் ஈடுபடவே பெரும்பாலான தம்பதியர் விரும்புகின்றனர் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Leave a Reply