1. எதையும் தைரியமாக அணுகுங்கள்.
2. எதில் சாதிக்க வேண்டுமோ, அந்தத் துறையில் ஆர்வம் காட்டுங்கள்.
3. எந்த சூழ்நிலையிலும் உங்களுக்குள் பயம் எட்டிப் பார்க்கக் கூடாது.
4. யார் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்தக்கூடாது.
5. நம்மால் முடியும் என்று உறுதியாக நம்ப வேண்டும்.
6. அம்மா, அப்பாவின் ஆதரவைப் பெறுங்கள்.
7. அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுங்கள்.
8. தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.
9. திருமணம் ஆன பிறகும் கணவனுக்காக லட்சியத்தை கைவிட்டுவிட வேண்டாம்.
10. உங்களுக்கு கிடைக்கும் கவுரவங்கள் தலைக்கனமாக மாறிவிடக்கூடாது.
– பெண்கள் சாதிக்க, சாதனை மாணவி ஸ்வேதா சொன்ன அட்வைஸ்தான் இவை.