Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » உணர்வுகள்

உணர்வுகள்

சிறு வயது குழந்தைகளை பாருங்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள் துன்பம் தருகின்ற அனுபவங்களையெல்லாம் மனதில் வைத்திருக்க மாட்டார்கள் சந்தோஷமான அனுபவங்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி மகிழுகிறார்கள்.

வாலிப வயதை தாண்டிய இளைஞர்களை பாருங்கள் எதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் காரணம் பீலிங் அதிலும் லவ் பீலிங் வந்து விட்டால் அது படுத்துகிற பாடில் அப்படியே உருகி போய் விடுகிறார்கள் கண நேரமும் இடைவெளி இல்லாமல் அவளின் சிந்தனையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறவர்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் தடைபட்டு கொண்டிருக்கின்றன.


மனிதர்கள் மெல்லிய பூவைப்போன்ற பெண்களைப் பார்த்துதான் உருகி உறைந்து போய் விடுவார்கள் இதுதான் இயற்கை மனிதனுக்கு வழங்கியுள்ள ஒரு வழிமுறை அதுவே சிறுகதையாக இல்லாமல் தொடர்கதையாகிக் கொண்டிருந்தால் அதில் இயற்கைக்கு எந்தபங்கும் இருக்காது அதற்கு மனிதனே காரணக்காரன் மனிதனை உருக்கிக் கொண்டிருக்கும் பெண் உணர்வுகள் தெய்வீகமான உணர்வுகள் என்று நினைத்து விடாதீர்கள் மிருகங்களுக்கு கூட இப்படிப்பட்ட பீலிங் உணர்வுகள் இருக்கிறது இவற்றை வளர்த்துக் கொண்டு மிருகங்களோடு ஏன் போட்டி போடுகிறீர்கள்.

ஒரு பெண்ணால் ஏற்படுகின்ற உணர்வுகள் அவனை உற்சாகமூட்டி வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டிருக்கிறது என்றால் அவன் வாழ தெரிந்தவன் அவளின் நினைவு மட்டும் போதும் என்று வாழ்க்கையை மறக்கிறவன் மெல்ல மெல்ல மனநல குறைபாட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறான் மனதை விட்டு விலகாத பசுமையான நினைவுகள் என்றும் இனிமையானது தான் அன்று நடந்த அழகிய கனவுகளை மீண்டும் அசை போட்டு பார்ப்பதும் சுகமான அனுபவம்தான் அந்த நினைவுகள் மனதின் ஒரு ஓரத்தில் இருப்பதால் எதுவும் கெட்டுவிடப் போவதில்லை.

சுமையான அனுபவங்களையும் சுகமான அனுபவம் என்று ஏற்றுக்கொண்டு நெஞ்சில் அமர்த்தி வைத்திருந்தாலும் அது தீங்கிழைக்கப் போவதில்லை அப்படி வாழுகின்ற மனிதர்கள் சிட்டுக் குருவிகளைப் போல தங்கள் வேலைகளை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறார்கள் ஆனால் மனம் மருகி நிற்கின்ற உணர்வடிமைகளின் நிலை அவர்களை போன்றதல்ல இவர்கள் வெறும் கனவு மட்டும் காணமாட்டார்கள் கனவுக்குள்ளும் கனவை கண்டு கொண்டிருப்பார்கள் காதலியின் வெளி தோற்றங்கள் உள் தோற்றமாக உறைந்து கிடக்கும் எறும்புகள் உணவை சேர்த்துக் கொண்டிருப்பதை போல இவர்கள் உணர்வுகளை சேர்த்துக் கொண்டு உலகம் தெரிந்த ஞானிகளை போல ஒரு தனித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்

இது போன்ற பித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒரு சமுதாயத்தின், ஒரு நாட்டின் முன்னேற்றம் பின்தங்கிதான் காணப்படும் பித்து பிடித்தவர்களால் ஆக்கப்பூர்வமான எந்த செயலையும் செய்ய முடியாது தளர்ந்த மனநிலையால் ஏற்படும் உயர்ந்த உணர்வுகள் ஒரு மனிதனை ஏதோ உயிருடன் வாழச் செய்யும் அவளவுதான் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் எந்த பித்தர்களையும் பார்க்க முடியாது அதனால்தான் அவர்கள் இவளவு தூரம் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள் அளவுகடந்து வருகின்ற பெண் நினைவுகள் ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது பலரும் அறியாத உணமை இப்படியே போனால் இனி பெண்கள் நினைத்தால்தான் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் ஆண்கள் சோகத்தில் சுகத்தை கண்டு காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கட்டும் சோகத்தில் சுகத்தை காண்பது தவறல்ல அந்த சுகங்களை இழுத்து சென்று கொண்டே இருப்பது மனம் பலஹீனப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது

இந்த பீலிங் நோயை விரட்டுவதற்கு ஒரு வழி இருக்கிது பலஹீனமான பீலிங் உணர்வுகளை பலம் நிறைந்த பீலிங் உணர்வுகளைக் கொண்டு விரட்டுவதுதான் பீலிங் நோயை விரட்டுவதற்கான வழியாகும் பலஹீனமான கலக்கம், மயக்கம், உறக்கம் இவைகளை பலம் நிறைந்த உற்சாகம், உத்வேகம், புத்துணர்ச்சி கொண்ட உணர்வுகளால் விரட்டி விட வேண்டும் ஆனாலும் இப்படி நினைத்துப் பார்க்கும் அளவிற்கு இது எளிதான வழி கிடையாது மீனின் வாசனையை நுகர்ந்து கொண்டிருக்கிறவர்களுக்கு தூங்கும் போது கூட அந்த வாசனை அருகில் இருந்தால் தான் தூக்கமே வருகிறது தென்றல் காற்று வீசும் ஒரு நந்தவனத் தோட்டத்தில் சென்று தூங்க சொன்னால் அங்கே அவர்களுக்கு தூக்கம் வருவதில்லை

இது போல உற்சாகம், புத்துணர்ச்சி போன்ற நந்தவனத்தை உணர்ந்து கொள்ள பீலிங் உணர்வுகள் எளிதில் அனுமதித்து விடுவதில்லை இவர்கள் புதிய இடங்களையும் புதிய பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்ளும் போது புதிய உத்வேகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும் உலக வாழ்க்கை என்பது உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உட்பட்ட வாழ்க்கையாகும் இங்கே ஆசாபாசங்களையும், சலனங்களையும் தவிர்த்துவிட்டு வாழ்வதற்கு சாத்தியமில்லை ஆனால் அவைகளை பொங்கி வழிய விடாமல் ஒரே சீராக வைத்திருக்கும் போது வாழ்க்கையும் சீராக ஒழுங்கு முறையுடன் இயங்கும்.