ஒதுங்கி ஒதுங்கி வாழ்வதுதான் வாழ்வா? தேங்கியிருந்து கொண்டு நாளை என்னும் கனவில் வாழ்வதுதான் வாழ்வா? எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பதுதான் வாழ்வா? இல்லை எப்போதும் செயல் புரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, நதி போல ஓடிக் கொண்டிருப்பதே வாழ்க்கை, பலர் வாழ்க்கையை பதுங்கிக்கொள்ளும் இடமாகவே வைத்திருக்கின்றனர். ஓடிக்கொண்டிருப்பதில் தான் உத்வேகமும், உற்சாகமும் இருக்கும், புத்துணர்ச்சியும் புது வேகமும் இருக்கும். செயல்பட தயங்குகிறவர்கள் அவைகளையெல்லாம் அலைச்சல்களாக நினைத்து அடங்கியிருக்கிறார்கள்.
எதிலும் ஆர்வமில்லை, எதையும் தேடி போக மனமில்லை, அதுவாக வரட்டும் பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தால், அப்படி எதுவும் வந்து விடாது, எதற்கும் சோம்பல், எதை செய்யவும் ஆர்வமின்மை இவைகளுக்கெல்லாம் காரணம் மனத்தளர்வு அப்படி என்னதான் கிடைக்கப் போகிறது என்ற சலிப்பு, இப்படி தன்னம்பிக்கையில்லாமல் முன்னோக்கி நடக்காமல் பின்னோக்கி நடப்பவர்கள் விழித்துக் கொள்ளுங்கள், எதுவும் தானாக வருவதில்லை எதையும் நாம்தான் கொண்டு வர வேண்டும் என்பதை நம்புங்கள்.
வாழ்வு என்பது ஒரு துடிப்பு, வாழ துடிக்கிறவனே வாழ கற்றுக்கொள்கிறான், எதிலும் எதிர் நீச்சல் போடுகிறான். உங்களுக்குள்ளே ஒரு துடிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், வாழ வேண்டும், முன்னேற்றம் வேண்டும் என்ற துடிப்பு ஏற்படும் போது தயக்கம், சோம்பலெல்லாம் காணாமல் போய் விடும். செயல்களில் எளிதானது, கடினமானது என்று எதுவும் கிடையாது, நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, எனவே சோர்வு, அலைச்சல், என்று எடுத்துக் கொள்ளாமல் ஓடிக்கொண்டிருங்கள்
வெற்றியில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அந்த வெற்றியை நோக்கி ஓடுவதில்தான் அதிக மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் ஒரு செயலை செய்ய வேண்டுமானால், அடுத்தவர்களின் தூண்டுதல்களினால் இல்லாமல் நம்க்குள்ளிருந்து ஏற்படும் உந்துதலினால் செயல்பட வேண்டும். உள்ளுணர்வுகளின் தூண்டுதல்களை போன்ற வலைமை வெளியே வேறு எங்கிருந்தும் கிடைப்பதில்லை, எந்த திடமான முடிவும் நம்மிலிருந்துதான் ஆரம்பிக்கப் படவேண்டும்.
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களெல்லாம், நம்மை உருவாக்கவே ஏற்படுகிறது, அதில் சோர்ந்து போகாமல் அதிலிருந்து புதிய பாடத்தினை, புதிய வழியினை, கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஒரு வழியல்ல பல வழிகள் உள்ளன. நாம் காணும் துன்பங்கள்தான் நமக்கு புது வழியினை காட்டித்தருகின்றன அதே துன்பத்தில் துவண்டு போனோமானால் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டு விடும். அங்கேதான் பல தற்கொலைகளும் நிகழுகின்றன எனவே துவண்டு விடாமல், நம் உள்ளுணர்வுகளால் உலகை வெல்வோம்.
விலகியிருந்து பார்க்கும்போது எல்லாமே, சிக்கல் நிறைந்ததாகவே தெரியும். துணிவோடு புகுந்து சென்றால் வானமும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். எனவே எதற்கும் தயக்கம் வேண்டாம் அஞ்சாமல் புறப்படுங்கள். வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆஒதுங்கி ஒதுங்கி வாழ்வதுதான் வாழ்வா? தேங்கியிருந்து கொண்டு நாளை என்னும் கனவில் வாழ்வதுதான் வாழ்வா? எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பதுதான் வாழ்வா? இல்லை எப்போதும் செயல் புரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, நதி போல ஓடிக் கொண்டிருப்பதே வாழ்க்கை, பலர் வாழ்க்கையை பதுங்கிக்கொள்ளும் இடமாகவே வைத்திருக்கின்றனர். ஓடிக்கொண்டிருப்பதில் தான் உத்வேகமும், உற்சாகமும் இருக்கும், புத்துணர்ச்சியும் புது வேகமும் இருக்கும். செயல்பட தயங்குகிறவர்கள் அவைகளையெல்லாம் அலைச்சல்களாக நினைத்து அடங்கியிருக்கிறார்கள்.
எதிலும் ஆர்வமில்லை, எதையும் தேடி போக மனமில்லை, அதுவாக வரட்டும் பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தால், அப்படி எதுவும் வந்து விடாது, எதற்கும் சோம்பல், எதை செய்யவும் ஆர்வமின்மை இவைகளுக்கெல்லாம் காரணம் மனத்தளர்வு அப்படி என்னதான் கிடைக்கப் போகிறது என்ற சலிப்பு, இப்படி தன்னம்பிக்கையில்லாமல் முன்னோக்கி நடக்காமல் பின்னோக்கி நடப்பவர்கள் விழித்துக் கொள்ளுங்கள், எதுவும் தானாக வருவதில்லை எதையும் நாம்தான் கொண்டு வர வேண்டும் என்பதை நம்புங்கள்.
வாழ்வு என்பது ஒரு துடிப்பு, வாழ துடிக்கிறவனே வாழ கற்றுக்கொள்கிறான், எதிலும் எதிர் நீச்சல் போடுகிறான். உங்களுக்குள்ளே ஒரு துடிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், வாழ வேண்டும், முன்னேற்றம் வேண்டும் என்ற துடிப்பு ஏற்படும் போது தயக்கம், சோம்பலெல்லாம் காணாமல் போய் விடும். செயல்களில் எளிதானது, கடினமானது என்று எதுவும் கிடையாது, நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, எனவே சோர்வு, அலைச்சல், என்று எடுத்துக் கொள்ளாமல் ஓடிக்கொண்டிருங்கள்
வெற்றியில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அந்த வெற்றியை நோக்கி ஓடுவதில்தான் அதிக மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் ஒரு செயலை செய்ய வேண்டுமானால், அடுத்தவர்களின் தூண்டுதல்களினால் இல்லாமல் நம்க்குள்ளிருந்து ஏற்படும் உந்துதலினால் செயல்பட வேண்டும். உள்ளுணர்வுகளின் தூண்டுதல்களை போன்ற வலைமை வெளியே வேறு எங்கிருந்தும் கிடைப்பதில்லை, எந்த திடமான முடிவும் நம்மிலிருந்துதான் ஆரம்பிக்கப் படவேண்டும்.
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களெல்லாம், நம்மை உருவாக்கவே ஏற்படுகிறது, அதில் சோர்ந்து போகாமல் அதிலிருந்து புதிய பாடத்தினை, புதிய வழியினை, கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஒரு வழியல்ல பல வழிகள் உள்ளன. நாம் காணும் துன்பங்கள்தான் நமக்கு புது வழியினை காட்டித்தருகின்றன அதே துன்பத்தில் துவண்டு போனோமானால் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டு விடும். அங்கேதான் பல தற்கொலைகளும் நிகழுகின்றன எனவே துவண்டு விடாமல், நம் உள்ளுணர்வுகளால் உலகை வெல்வோம்.
விலகியிருந்து பார்க்கும்போது எல்லாமே, சிக்கல் நிறைந்ததாகவே தெரியும். துணிவோடு புகுந்து சென்றால் வானமும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். எனவே எதற்கும் தயக்கம் வேண்டாம் அஞ்சாமல் புறப்படுங்கள். வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும் எனவே வாழ்வை நேசியுங்கள், உங்களை நேசியுங்கள் வாழ்க்கை உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கி நிற்கும்.