Home » காதல் » காதலை ஏ‌ற்று‌க் கொ‌ண்டது‌ம்..

காதலை ஏ‌ற்று‌க் கொ‌ண்டது‌ம்..

பொதுவாக ஒரு ஆ‌ண், தா‌ன் காத‌லி‌க்கு‌ம் பெ‌ண்‌ணிட‌ம் தனது காதலை தெ‌ரி‌வி‌ப்பதே பெ‌ரிய ‌விஷயமாக இரு‌க்கு‌ம். அ‌ப்படியே தை‌ரியமாக காதலை வெ‌ளி‌ப்படு‌த்‌தி அ‌ந்த பெ‌ண்ணு‌ம் அ‌த‌ற்கு ச‌ம்மத‌ம் சொ‌ல்‌லி‌வி‌ட்டா‌ல்.. காதல‌னி‌ன் ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்கு அளவே இரு‌க்காது.

ஆனா‌ல் இ‌ந்த அளவுகட‌ந்த ம‌கி‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌சில‌ர் செ‌ய்து ‌விடு‌ம் தவறுகளை‌த்தா‌ன் இ‌ங்கே கு‌றி‌ப்‌பிட‌ப் போ‌கிறோ‌ம்.

அ‌திக‌ம் எ‌ன்பது எ‌ப்போதுமே ஆப‌த்து தரு‌ம் ‌விஷயமே. காத‌லிலு‌ம் அ‌திக‌ம் எ‌ன்பது அ‌தி‌ர்‌ச்‌சியு‌ம், ஆப‌த்து‌ம் த‌ந்து‌விடு‌ம்.


முத‌ல் முறை காதலு‌க்கு ச‌ம்மத‌ம் ‌கிடை‌த்த ‌பிறகு அடு‌த்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போதே பெரு‌ம்பாலான அதாவது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை‌ப் பே‌சி முடிவெடு‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது.

காதல‌ர்களு‌க்கு‌ள் ‌மிக ந‌ல்ல பு‌ரித‌ல் உ‌ண்டாகு‌ம் வரை ‌விலை உய‌ர்‌ந்த ப‌ரிசுக‌‌ள் வா‌ங்குத‌ல், கொடு‌த்த‌ல் வே‌ண்டா‌ம்.

கையெழு‌த்‌தி‌ட்டோ அ‌ல்லது புகை‌ப்பட‌ங்களை இணை‌த்தோ வரு‌ம் ப‌ரிசுகளையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வதை த‌வி‌ர்‌க்கலா‌ம்.

எ‌ப்போது ச‌ந்‌தி‌த்தாலு‌ம் ஒரு ப‌ரி‌சினை வா‌ங்‌கி அ‌ன்ப‌ளி‌ப்பாக அ‌ளி‌ப்பதையு‌ம் த‌வி‌ர்‌க்கலா‌ம். ஒரு ‌சில கால‌த்‌தி‌ல் இது முடியாம‌ல் போகு‌ம் போது, அத‌ற்கு‌ள் ச‌லி‌த்து‌வி‌ட்டதா எ‌ன்பது போ‌ன்ற ‌பிர‌ச்‌சினை உருவாகு‌ம்.

காத‌லி‌க்க‌‌த் துவ‌ங்‌கியது‌ம் அடி‌க்கடி தொலைபே‌சி‌யி‌ல் பே‌சி‌க் கொ‌ள்வது சகஜ‌ம்தா‌ன். ஆனா‌ல், ஆர‌ம்ப‌த்‌தி‌ல் ‌நிறைய நேர‌ம் பே‌சி‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் பேச இயலாம‌ல் போகு‌ம் போது‌ம் ‌பிர‌ச்‌சினை தலை தூ‌க்கு‌ம். அதனா‌ல் எ‌த்தனை குறைவான நேர‌ம் பேச முடியுமோ அ‌வ்வளவு குறைவான நேர‌த்தை ம‌ட்டு‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு அதனையே கடை‌பிடி‌க்கலா‌ம்.

எதையாவது பேச வே‌ண்டு‌ம் என தேவை‌யி‌ல்லாத தகவ‌ல்களை சொ‌ல்வது‌ம் ஆப‌த்தாகவே முடியு‌ம். ஆர‌ம்ப‌த்‌திலேயே தேவை‌யி‌ல்லாத ‌சில ‌விஷய‌ங்களை‌ப் பேசுவதை‌த் த‌வி‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

ஆர‌ம்ப‌த்‌தி‌ல் பொதுவான ‌விரு‌ப்ப‌ங்க‌ள், வெறு‌ப்புக‌ள், ந‌ண்ப‌ர்க‌ள், பழ‌க்க வழ‌க்க‌‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றையு‌ம், அதையு‌ம் கட‌ந்து பொதுவான நா‌ட்டு நட‌ப்புகளையு‌ம் ப‌ற்‌றி பேசலா‌ம்.