Home » கொறிக்க... » பெண்ணுலகம் » எதையும் செய்யலாம் எளிதாக..

எதையும் செய்யலாம் எளிதாக..

உங்கள் மொபைல் போனை எப்போதும் “ஆப் செய்தே வைத்திருங்கள். உங்கள் குடும்பத்திற்கோ அல்லது பணிக்கோ முக்கியமாக தேவைப்பட்டால் மட்டுமே மொபைல் போனை பயன்படுத்துங்கள்.

* வேலை செய்யும் போது, உங்களுக்கு பிடித்தமான இசையை கேட்டுக் கொண்டிருந்தால், களைப்பும் தெரியாது. மனமும் அமைதியாக இருப்பதை உணரலாம்.


* நடைப் பயிற்சி செய்வது எளிமையான மனதிற்கு இனிமையான பொழுது போக்கு.

* ஏற்கனவே உங்கள் வாழ்வில் நடந்த மனதிற்கு இனிமையான சம்பவங்களை அவ்வப்போது நினைவுகூறுங்கள். அதன் மூலம், மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.

* பணிபுரியும் பெண்ணாக இருந்தால், உங்கள் பணியிடம் சவுகரியமான தட்பவெப்பநிலையில் உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள். அது மிகவும் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருந்தால், உங்களுக்கு அசதியையும், உற்சாகமின்மையையும் ஏற்படுத்தும்.

* கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது, கண்களை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். அதுமட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டருக்கு அவ்வப்போது ஓய்வும் கொடுங்கள்.

* அமைதியான இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யுங்கள். தினமும் காலையில் பிராணாயாமம் செய்து பழகுங்கள்.

* கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கோபம் அடைந்தால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதன் விளைவாக உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படும்.

இந்தக் குறிப்புகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், அழகு ராணிகளாய் புத்துணர்ச்சியுடன் நீங்கள் செயல்படலாம். முயற்சி செய்து தான் பாருங்களேன்!