Ilaignan.com

நான் நலமில்லை… நீ?
பள்ளிப் படிப்பில் பாதியைக் கூட இதுவரை யாரும் தாண்டியிராத கிராமத்துக்காரன் நான். ?கல்லூரியில் படிக்கப் போகிறேன்? என்று சொன்னதும்,  ?வேணாம் கண்ணு! டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி வரும்போது ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா!? என்று பதறினாள் என் அம்மா.

எனக்குச் சிரிப்புதான் வந்தது. ?ஆமாமா! அங்க பட்டம் கொடுக்கும் போது, கூடவே ஒரு புள்ளையையும் கொடுப்பாங்களாக்கும்! அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு பேரு பண்ற தப்பும்மா!? என்றேன்.

அப்படின்னா, எந் தலையில சத்தியம் செஞ்சுட்டுப் போ!? என்று சத்தியம் வாங்கிக்கொண்டு, கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள். மனசு நிறைய மகிழ்ச்சியோடு நான் பஸ் ஏறும்போது கூடத் தெரியாது… என் சத்தியத்துக்கு வேட்டு வைக்க, ஒரு மோகினியைப் போல நீ காத்திருப்பாய் என்று!

விடுதியில் சேர்ந்து, வகுப்புக்குள் நுழைந்த முதல் நாள், முதல் பாட வேளையிலேயே உன்னைப் பார்த்தேன். ஐயோ… அழகாக இருக்கலாம். ஆனால், இப்படி அநியாய அழகாகவா இருப்பாள் ஒருத்தி!

எதேச்சையாக நீ என்னைப் பார்த் தாலே, இஷ்டத்துக்கு எகிறியது இதயத் துடிப்பு! வேறு வழியே இன்றி விழுந்தேன் காதலில். ஆனால், அதை உன்னிடம் சொல்லவே இல்லை… கடைசி வரை!

கணவனை இழந்து, தன்னந்தனியாக வயல்காட்டில் வேலை செய்து, என்னை இதுவரை கொண்டுவந்த என் அம்மாவின் முகம்தான் என்னை உறுதியாகத் தடுத்தது உன்னிடம் என் காதலைச் சொல்வதை!

ஆனால், மூன்றாவது வருடம் முடிவை நெருங்க நெருங்க… உன் பார்வைகளும் செயல்களும், நீயும் என்னைக் காதலிப்பதை உணர்த்தி, என்னை உயிரற்றுப் போகச் செய்தன!

கிட்டத்தட்ட கல்லூரியே விரும்பும் அழகோவியமே! போயும் போயும் நானா கிடைத்தேன் உனக்கு? என்னை மன்னித்துவிடு. உன்னோடு வாழ்கிற பாக்கியம் எனக்கில்லை! என்று உன்னிடம் மானசீகமாக கெஞ்சிக் கேட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.

ஆனால், நீ விடவில்லை. நாள் ஆக ஆக… மாதம் ஆக ஆக… வருடம் ஆக ஆக… உன் நினைவு விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருந்தது.

உன்னைப் பிரிந்து வந்து, ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் அறுபது வருடங்களானாலும் என் இதயத்தில் உன்னைத் தவிர, வேறு யாரும் நுழையவே முடியாது என்பதை என் அம்மா, என்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லும் போதெல் லாம் வேண்டாம் என்று நான் உறுதி யோடு உதிர்த்த சொல் உணர்த்தியது.

கடைசியில் ஒரு நாள், ஏம்ப்பா கல்யாணமே வேணாங்குற? அங்கிட்டுப் படிக்கும்போது, யார் மேலயாவது ஆச வெச்சிட்டியா? என்று பொறுக்க மாட்டாமல் அம்மா கேட்டபோது, என் கண்கள் கலங்கி விட்டன!

அய்யோ ராசா… தப்புப் பண்ணிட்டனே! சத்தியம் வாங்கிட்டு, உன் மனசைக் கட்டிப் போட்டுட்டனே! யார்றா அந்தப் புள்ள? நீ அவளையே கட்டிக்க என்று தழுதழுத்தாள் என் தாய்.

இந்நேரம் அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்மா!? என்றேன் ரணமான இதயத்தோடு!

இருக்காதுடா… இருக்காது! போடா, போய்ப் பார்த்துட்டு வா!? என்று அரற்றி அனுப்பினாள் என் அம்மா. அவள் நினைப் பது மாதிரி, உனக்குக் கல்யாணமாகாமல் இருந்தால், எல்லாம் நன்றாகவே முடியும்! ஆகியிருந்தால்…

உன்னை என்று பார்த்தேனோ அன்றிலிருந்து இன்று வரை உன்னை நான் காதலித்துக்கொண்டு இருக்கிறேன். என் ஆயுசு தீரும் வரை உன்னையே காதலிப்பேன் என்பதை மட்டும் சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்துவிடுவது என்கிற முடிவுடன், உன் வீட்டைக் கண்டுபிடித்துக் கதவைத் தட்டினேன்.

நீதான் திறந்தாய். எதிர்பாராமல் என்னைப் பார்த்த மகிழ்ச்சியில், ஆர்வமாக என்னை அழைத்து உட்காரச் சொல்லி, அம்மா, அண்ணன், அண்ணி என்று ஒரு கூட்டத்தையே அறிமுகம் செய்து வைத்தாய். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிவிட்டு, ?எங்கே உன் கணவர்?? என்றேன்.

?கணவனா?!? என்றனர் எல்லோரும். ?இன்னும் இவளுக்குக் கல்யாணமே ஆகலியே!? என்றார் உன் அம்மா. தொடர்ந்து, ?நீயாவது சொல்லுப்பா! கல்யாணப் பேச்சு எடுத் தாலே, கையெடுத்துக் கும்பிடுறா. மனசுக் குள்ளயே யாரையோ விரும்பியிருக்கா. ஆனா, அது அவனுக்கும் புரியலை. இவளுக்கும் சொல்ற தைரியம் இல்லை. எங்ககிட்டயாவது அவன் யாருனு சொல்லுடி. நாங்க போய்ப் பேசுறோம்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறா! இவளை இங்க இப்படித் தவிக்க விட்டுட்டு, அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்க தம்பி!? என்றார்.

அவன் நல்லா இல்லை!? என்றேன்.

அவன் யார்னு தெரியுமா??

சொன்னேன். அம்மாவின் சத்தியத் தில் ஆரம்பித்து அத்தனையும் சொன் னேன். கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தனர். பின், நம்மைத் தனிமையில் விட்டுவிட்டு நகர்ந்ததும், தேங்க்ஸ் என்றாய்.

அதை நாமிருவரும் சேர்ந்து காதலுக்குச் சொல்வோம்!

கண்களுக்குள் பாப்பா

இருப்பதாகச்

சொல்கிறார்களே என்று

கண்ணாடி முன் நின்று

உற்று உற்றுப் பார்த்தேன்.

அட, ஆமாம்!

என் இரண்டு கண்களுக்குள்ளும்

ரெண்டு குட்டிப்பாப்பாவாக

நீதான் அமர்ந்திருக்கிறாய்!

தபூ சங்கர்-

காதல் ஆத்திசூடி
அவளிடம் மதி மயங்கு!

உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்… சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.

அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!

உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும்.

மீண்டும் தொலைப்பதற்காக!

ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!

அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும்.

அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு. குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டுத் திரும்பும் நள்ளிரவிலும் அவள் கண்ணில் படு. எங்கெங்கும் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்.

இவன் ஒருத்தனா… இல்லை ஏழு பேரா என அவள் குழம்ப வேண்டும்.

குட்டையைக் குழப்பி மீன் பிடிப் பதைப் போல, அவள் மனதைக் குழப்பி மனதைப் பிடிக்கும் வித்தை இது!

இதயத்தை அலங்கரி!

ஒருத்தி நுழையப் போகிறாள் என்பது தெரிந்த நொடியிலேயே, உள்ளங்கை அளவிலிருந்து உலக அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடும் இதயம்! ஆகவே இதயத்தை அலங்கரி.

இனி அவளுக்கும் உனக்கும் ஏற்படப் போகும் நிகழ்வுகளின் ஆல்பங்களை அடுக்கிவைக்க, அதன் சுவர் முழுவதும் அலமாரிகளை அடி.

அவளை வரவேற்க வளைவுகளும், விளையாட ஊஞ்சலும், நீராடத் தடாகமும், துயில்வதற்கு மெத்தையும், முக்கியமாய் அவள் தன்னை அடிக்கடி அழகு பார்த்துக்கொள்ள அவளுயரக் கண்ணாடியும் அமை. அவள் கேட்க, துடிப்புகளில் இனிய இசையை உண்டாக்கு. சீக்கிரம்… அதோ அவள் வந்துகொண்டு இருக்கிறாள்!

ஈர்க்கும் படி நட!

இது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், அவளை ஈர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம்.

ஏன் என்றால், அவ்வளவு கஷ்டத் துக்கும் பரிசாகக் கிடைக்கப்போவது அவளின் அழகான இதயம்.

முதன்முதலாய் உன் கண்களை அவள் கண்கள் சந்திக்கிறபோதுதான் உன் காதல் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப் படுகிறது.

கண்ணியம் என்பது அரசியலில் இருக்கிறதோ இல்லையோ, அவளை ஈர்க்கும் உன் முயற்சியில் அது இருந்தால், வெகு சீக்கிரமே அவள் மனதில் பட்டொளி வீசிப் பறக்கும் உன் கொடி!

உறுத்தாமல் பார்!

காதலிப்பதால் கிடைக்கும் சுகத்தில் பாதி சுகம் பார்த்துக் கொண்டு இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

பார்வைகள் ஒருபோதும் பார்ப்பதால் தீர்வதில்லை. மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.

உன் பார்வை அவள் அழகைத் தின்னக் கூடியதாக இருக்கக் கூடாது. அவள் அழகுக்கு மகுடம் சூட்டுவதாக இருக்க வேண்டும். உன் பார்வையால் தனது அழகு வளர்வதாக அவள் உணர வேண்டும்.

இப்படி எல்லாம் எப்படிப் பார்ப்பதென்று நீ எங்கேயும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை.

மனதில் காதலை மட்டும் வைத்து, ஒரு மலரைப் பார்ப்பதைப் போல் அவளைப்பார்.

உனது கண்களால் உன் உள்ளத்தில் உள்ள காதலுக்கு ஓராயிரம் ஊற்றுக்கண்கள் திறக்கும்!

ஊதியமின்றிக் காவல் செய்!

உலகத்திலேயே அழகான வேலை, உன் காதலியைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி வேலைதான்.

நீ அவளைப் பின்தொடர்வதை அவள் தெரிந்துகொண்டால், எங்குவேண்டு மானாலும் துணிச்சலுடன் போவாள்.

அவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ ‘எங்க போற’ என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய். அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.

என்றாவது ஒரு நாள். குரைக்கும் நாய்க்குப் பயந்தோ, பாய்ந்து வரும் மாட்டைக் கண்டோ அத்தனை பேரையும் விட்டுவிட்டு உன் பின்னால் ஓடி வந்து ஒளிவாள். அதுதான் உன் காவலுக்கும் காதலுக்கும் அவள் தரும் மரியாதை!

எதற்கும் வழியாதே!

தவறுதலாய் அவள் கைக்குட்டை கீழே விழுவதைப் பார்த்துவிட்டால் ஓடிப்போய் சிதறு தேங்காய்ப் பொறுக்கு பவனைப் போல் பொறுக்காதே.

செடிக்கு அடியில் கிடக்கும் மலரைப் போல் நிதானமாய் எடு. அதை அவளிடம் தருகையில் ‘உங்க கர்ச்சீப். மிஸ் பண்ணிட்டீங்க’ என்று வழியாதே. “இது உன் கர்ச்சீப்பா’ என்று பந்தாவாகக் கேள்.

இன்னொரு தெய்வாதீனத் தருணத்தில் நீயும் அவளும் அருகருகே நிற்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலாம்.

அப்படி அவள் அருகில் நிற்கையில் உனக்குக் கைகால்கள் உதறலாம். அல்லது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏகாந்தமாய் நமட்டுச்சிரிப்பு சிரிக்கத் தோன்றலாம்.

இதில் நீ எதைச் செய்தாலும், உனக்கு அவள் போட்டுவைத்திருக்கும் மதிப்பெண் அம்பேல் ஆகிவிடும்.

ஒன்றும் தெரியாத பையனைப் போல அமைதியாய் நில்.

அமைதி ஓர் அற்புதமான வசிய மருந்து!

ஏகலைவனாய் இரு!

நீ எத்தனையோ காதல் காவியங் களைப் பார்த்திருக்கலாம். எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவை எதிலிருந்தும் உனக்கான காதலை நீ எடுத்திருக்க முடியாது.

அது அவளிடம் மட்டுமே கொடுத்தனுப்பப்பட்டு இருக்கிறது.

அதை, அவளை நீ பார்த்த நொடியி லேயே உன்னிடம் சேர்த்துவிட்டாள்.ஆகையால், காதலில் அவளே உனக்கு குரு.

அதற்கான குருதட்சணையாக, அவள் உன் உயிரைக் கேட்டாலும், ஏகலைவன் போல் யோசிக்காமல் கொய்து தரத் தயராய் இருக்க வேண்டும் நீ.

ஆனால், அப்படிக் கேட்க அவள் ஒன்றும் துரோணர் இல்லை. என்றாலும் அவள் எப்போது எது கேட்டாலும் தருவதற்குத் தயராய் நீ ஏகலைவனாகவே இரு!

ஐம்புலனிலும் அவளை வை!

கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள்.

உன் காதலியும் இப்படித்தான் உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள்.

ஆனால், அதற்கு முன்… உன் ஐம்புல னாலும் அவளை நீ காதலி.

கண்களில் அவள் உருவத்தை வை

காதுகளில் அவள் குரலை வை

சுவாசத்தில் அவள் வாசம் வை

உதடுகளில் அவள் பெயரை வை

உணர்வில் அவள் உயிரை வை!

ஒரு நாள் காதலைச் சொல்!

அவள் மகிழ்வாய் இருக்கும் நேரம் பார்த்து, “நான் ரொம்ப நாளாய் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவள் நீயா?’ என்று கேள்.

புன்னகையை அடக்கிக்கொண்டு ‘ஏன்… அவள் யாரென்று உனக்குத் தெரியாதா?’ என்பாள்.

‘அவளை நினைக்க ஆரம்பித்த பிறகு என்னையே நான் மறந்துவிட்ட தால், அவள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது’ என்று சொல்.

‘உன்னை ஞாபகப்படுத்திக்கொள். அவள் யாரென்பது தெரிந்துவிடும்’ என்பாள்.

‘அவளை நான் மறந்தால்தானே என் ஞாபகம் எனக்கு வரும்’ என்று கேள்.

‘அவளை மறந்துவிட வேண்டியது தானே’ என்பாள்.

‘என் ஆயுள் காலம் வரை அவளை ஞாபகம் வைத்திருப்பேன்’ என்பது நிஜமில்லைதான்.

ஆனால், அவளை நான் ஞாபகம் வைத்திருக்கும்வரைதான்…

‘நான் உயிரோடு இருப்பேன் என்பது மட்டும் கண்டிப்பாய் நிஜம்’ என்று சொல்.

‘அப்படியானால் நீ காதலிக்கும் பெண் நான்தான்’ என்பாள் தலையைக் குனிந்து.

‘எனக்குத் தெரியும்’ என்று சொல்.

செல்லமாய் கோபிப்பாள். பிறகு கண்டிப்பாய் கிடைக்கும் அழகான பிகு முத்தம்!

ஓர் உலகம் செய்!

அந்த உலகம் அற்புதமானது.

அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்… கதகதப்பாய் மழை பெய்யும்.

அந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே.

நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.

ஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம்.

அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள்.

அதற்கின்னும் காலமும் கனிய வில்லை. ஆப்பிளும் கனியவில்லை!

ஒளவியும் ஒளவாமலும் பழகு!

இது என்ன வார்த்தை என்று முழிக்காதே.

தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.

தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது.

அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல.

மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்… நீ பூமியாய்!

காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது.

ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.

தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!

* – தபூ சங்கர், ஆனந்த விகடன்-

நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?
ஒரே ஒரு அனிமேஷன் படத்தில் நமது உலகத்தின்(பூமி) முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்வோமா? கீழே உள்ள அணிமேசனை முழுதும் பாருங்கள்.

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்களைச் கொஞ்சம்

உலகம் தேடும்

முத்தமிழ் சிவப்பாகும்

போர் மேகங்கள் சூழும்

உங்களுக்கும் வலிகள் புரியும்

இயந்திரப் பறவைகள் எதிரியாகும்

ஆமிக்காரன் இயமன் ஆவான்

உயிர் வெளியேறிய

உடல்களை காகம் கொத்தும்

விழிகளிலே குருதி கசியும்

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்

பலமுறை தீப்பிடிக்கும்

பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?

ஒரணியில் திரண்டு

ஒரே முடிவு எடுப்பீர்களா?

உங்கள் அரசியல் விளையாட்டில்

எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!

எந்த இனத்தவனும் உங்களை

மன்னிக்கமாட்டான்

சொந்த இனத்தவனைக்

நீங்கள் காத்திட மறந்துவிட்டால்

வாயிலே நுழைவதெல்லாம்

உங்கள் வயிற்றிலே செரிக்காது

சொந்த சகோதரன்

அங்கே பட்டினியில் சாகும்போது

இந்த தாகம் இந்தச் சோகம்

இந்த இன அழிப்பு

இந்த பேர் இழப்பு

எல்லாம் தமிழனுக்கே

வாய்த்த தலைவிதியா?

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி

நீ குளிப்பாய்

பெற்ற பிள்ளையை

படுக்கையில் நீ இழப்பாய்

நித்திரையில் நிம்மதியே இருக்காது

மரநிழலில் மனம் குமுறும்

நரம்புகள் வெடிக்கும்

நா வறண்டு போகும்

பெண்களின் ஆடைகள் தூக்கி

பேய்கள் வெறி தீர்க்கும்

ரத்த ஆறு வழிந்தோடும்

நடுவிலே நாய் நக்கும்

தலையில் செல்வந்து விழும்

தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே

பதுங்கு குழிகளில் வாழ

உங்களால் முடியுமா?

அகோரத்தின் உச்சத்தை

உணர்ந்தது உண்டா?

அழுது களைத்து மீண்டும்

எழுந்து நின்றது உண்டா?

உன்னைப் புதைக்கும் இடத்தில்

உயிர் வாழப் பழகியதுண்டா?

உலகம் எங்கும் சிதறி

தாயைப் பிரிந்து வாழும்

துயரத்தை அனுபவிக்க முடியுமா?

பனிக் குளிரில் பனியோடு

பனியாய்க் கரைந்து

உங்களால் உறைய முடியுமா?

சவப் பெட்டிக்குள் உறங்கி

நாடு விட்டு நாடு போய்

நரகத்தில் தொலையமுடியுமா?

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பாண் துண்டோடு பருப்பு

பகலில் வயிறு பசியாறும்

பாதி வயிற்றோடு நெருப்பு

இருளில் குளிர் காயும்

சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்

சிறைச்சாலைக்கும்

ஒரே ஒரு பொருள்தான்

எங்கள் யாழ்ப்பாணம்!

பாலைவனத்து ஒட்டகமாய்

பாம்புகளுக்கு நடுவில்

எங்கள் வாழ்க்கை ஓடும்

ஊரின் பெயரோ மட்டக்களப்பு!

தாய்மண் தேகத்தை சுவைத்து

ஆட்டுக்கறியாக பங்கு போடும்

நவீன மிருகஙக்ளை

யார் வேட்டையாடுவது?

ஆண்ட பரம்பரையின்

அடையாளத்தை அழிக்கமுடியுமா?

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்

ஆட்சி இழந்தாலும்

அனைத்துக் கட்சிகள்

கூட்டம் நடந்தாலும்

தமிழகம் முழுவதும்

கடைகள் மூடப்பட்டாலும்

திரையுலகமும் திரண்டு

பேரணியில் சென்றாலும்

இலக்கியத் தோப்பினில்

எரிமலை எழுந்தாலும்

தனித் தனியாக நீங்கள்

உண்ணாவிரதம் இருந்தாலும்

எப்போதும் உங்களை

நெஞ்சிலே சுமக்கின்றோம்

தணியாத தாகமாய்

விடுதலை கேட்கிறோம்!

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்

எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!

நீட்டியுள்ள நேசக்கரத்தை

உறுதியாய்ப் பற்றுகின்றோம்!

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

-தமிழன், நோர்வே-

நறுக்குகள் – காசி ஆனந்தன்
மாடு -

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்

வண்டி இழுக்கிறது

கொம்பை மறந்த மாடு

முரண்

இறைவனின் வாகனம் என்றான் நாயை

அவதாரம் என்றான் பன்றியை

இறைவனே என்றான் குரங்கை

இவனே திட்டினான் என்னை

நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை

நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.

வீடு தூங்க கட்டில்

நாடு தூங்க நாற்காலி

ஞானம்

ஞானம் பெற்றது

நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்

கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்

பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

பாடம்

புரட்சியாவது வெங்காயமாவது

என்கிறாய்

தெரிந்து பேசு

காயப்படுத்தியவனின் கண்ணீரை

வாங்கும் வெஙகாயம்.

சென்னிரை வாங்கும் புரட்சி

கோயில்

செருப்புகளை வெளியே விட்டு

உள்ளே போகிறது அழுக்கு.

தளை

கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்

பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

வில்

வீழ்ந்த தமிழன் கதையை

விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது

மேடையில்-

வெட்கம் கெட்ட வில்

பெண்மை

தெரிவது உனக்கு அவள் கண்களில்

வண்டும் மீனும் பூவும்

தெரிவதில்லை கண்ணீர்

வெறி

எரியவில்லை அடுப்பு சேரியில்.

போராடினோம்…எரிந்ததுஅடுப்பல்ல-சேரி

வீரம்

உன் கனவில் பாம்பு  துரத்துகிறது

நீ ஓடுகிறாய்

குறவன் அவன் துரத்துகிறான்

பாம்பு ஓடுகிறது

வீரம் தொழிலாலிக்கு

சாமி

எங்கள் குடிசையில்

அடிக்கடி சாமி ஆடுவாள்

அம்மா ஏனோ தெரியவில்லை

அன்றும் இன்றும்

குடிசைக்கே வருகிறது சாமி

மாடிக்கே போகிறது வரம

நிழல்

எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்

நிமிர்ந்தோம்

இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்

மாவீரன்

இது உயிருக்கு வந்த சாவு அல்ல

சாவுக்கு வந்த உயிர்;

போர்

ஊரில் உங்கள் சுடுகாடு.

சுடுகாட்டில் எங்கள் ஊர்.

உறுத்தல்.

இரவெல்லாம் விழித்திருந்து

எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…

வாங்கினேன் உறங்குவது எப்படி

இவள் பாயில்?

மனிதன்

இவன் பசுவின் பாலைக்கறந்தால்

பசு பால் தரும் என்கிறான்.

காகம் இவன் வடையை எடுத்தால்

காகம் வடையை திருடிற்று என்கிறான்

இப்படியாக மனிதன்….

மானம்

உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?

அவன் கைகளை வெட்டு

கெஞ்சி கோவணம் கட்டாதே

அம்மணமாகவே போராடு.

அறுவடை

திரைப்படச்சுவரொட்டியை

தின்றகழுதை கொழுத்தது

பார்த்த கழுதை புழுத்தது

மந்தை

மேடை

தமிழா!

ஆடாய் மாடாய்

ஆனாயடா…நீ என்றேன்

கைதட்டினான்

பெண்

ஏடுகளில் முன்பக்கத்தின்

அட்டையில்

வீடுகளில் பின்பக்கத்தில்

அடுப்பங்கரையில்

கோடை

தங்க வளையலைக்கழற்றி

போராளியிடம் தந்தாள்

செலவுக்குவைத்துக்கொள்

உங்களில் பலருக்கு

கைகளே இல்லை

எனக்கு எதுக்கு வளையல்

திமிர்

வேலைக்காரன்மேல் பாய்ந்தார்

நாயே பீட்டரை கவனித்தாயா?

இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்

நாய் என்றால் மனிதன

கொலை

ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…

விரியுமுன்பே பறித்து

இனறவனுக்கு அர்ச்சனை

செய்கிறான்

நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு

அடக்கம்

அடக்கம் செய்யப்படுகிறோம்…

இரண்டு பெட்டிகளில்.

சவப்பொட்டியிலும்

தொலைக்காட்சிப் பெட்டியிலும்

உலகமைதி

மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்

புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.

போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

அடி

கலையை கலைஞனை

போற்றிய நாடிது என்கிறாய்…

காலம் காலமாய்

பறையை பறயனை தாழ்த்திய நீ.

ஆணாதிக்கம்

எப்படியும் இருக்கலாம்

ஆணிண் திமிர்

திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்

அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

வேலி

மயில் இறகு புலித்தோல்

மான் கொம்பு யானைத்தந்தம்

அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.

வனவிலங்குகள் காப்பாளர் அப்பா

காலம்

உன் கையிலா கடிகாரம்?

கடிகாரத்தின் கையில் நீ.

கடற்கரை

உடல் நலம் தேடி

காற்றுவாங்க வந்து போகும்

பெரியஇடத்து மாடிகள்

இங்கேயே நோயோடும் நொடியோடும்

ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்

நிலவு

புராணமாய் இறைவனின் தலையில்

வரலாறாய் மனிதனின் காலில்.

இருள்

பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற

நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…

எங்கேவெளிச்சம்?

தாஜ்மஹால்

காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்

காதலை புதைத்த இடம் காட்டு

எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட

அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?

புலமை

கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக

இவன் உவமைகளும்…முத்துக்கள்

என்றானே கண்ணீரை!

பால்

என்னைத் தெய்வம் ஆக்கினாய்

சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-

உன்பால் வேறுபாடு அழுத்தமானது

சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்

அரண்

என் வலகையில் ஐந்துவிரல்கள்

உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல

அறையவும்தான்

தேர்தல்

மாலை வளையல் ழூக்குத்தி

பென்னான எதுகும் இல்லை

எங்கள் குடிசையில்.

அவன் செல்கிறான்

இருக்கிறதாம் எங்களிடம்…

பொன்னான வாக்குகள்

இனவெறி

மாடுகள் காணாமல்போகும் என்று

தோலில் குறிபோடும் எங்கள் மண்

கொஞ்சநாளாய்…

மனிதர்களையே காணவில்லையே.

குப்பைத்தொட்டி

அலுவலகத்தில் இருக்கிறவனுக்

இதுகுப்பைதn;தாட்டி

குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு

இதுஅலுவலகம்.

ஏழ்மை

சதை பிடித்து விடுகிறாள்

அழகு நிலையத்தில்

எலும்புக்கைகளால்

கண்ணோட்டம்

செருப்பைப்பார்கையில் நீங்கள்

அணிந்திருக்கிறவனின்

காலைப்பார்க்கிறீர்கள்.

நான் செய்தவனின்

கையைப்பார்க்கிறேன்

நிமிர்வு

தேவை பயில்வன்களல்ல வீரர்கள்

உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு

வில்லில் இல்லாத நிமிர்வா?

கூண்டு

விடுதலை ஆவாரா சிறையில்

இருந்து என்கணவர்?

சோதிடம கேட்கிறாள்

கூண்டுக்கிளியிடம்

மண்

என்னை என் மண்ணில்

புதைத்தாய் பகைவனே!

என் மண்ணை

எங்கே புதைப்பாய்?

குடுகுடு

நல்லகாலம் வருகுது

நல்லகாலம் வருகுது..

தெருவிலேயே நிற்கிறான்

குடுகுடுப்பைக்காரன்

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?
அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.

சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா…

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.

கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச்’ வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!

நன்றி: தினகரன்

சீனாவுடன் மோத இந்தியா தயாராகி வருகிறது: அமெரிக்கா
சீனாவுடன் ஒரு வரம்புக்குட்பட்ட மோதலுக்கு இந்தியா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க உளவுத் துறையின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர்,உளவுத் துறைக்கான அமெரிக்க செனட் தேர்வுக்குழு முன்னர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது அவர், சீனாவுடன் ஒரு வரையறையுடன் கூடிய மோதலுக்கு இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்தார்.

இந்திய-சீன எல்லையில் சீனாவின் மேலாதிக்கம் குறித்த இந்தியாவின் கவலை அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக இந்தியா தனது இராணுவ பலத்தை பலப்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

மக்கள் தொகை: விழித்துக்கொண்ட ஜப்பான்!
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான ஜப்பானில், தற்போது மக்கள் தொகை குறைந்து கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் மக்கள் தொகை குறித்து சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 2060 ஆம் ஆண்டில் ஜப்பானின் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும்.

இதே நிலை நீடித்தால் எதிர்வரும் 2110 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 4 கோடியே 29 லட்சமாகி விடும். தற்பொழுது ஜப்பானின் மக்கள் தொகை 12 கோடியே 77 லட்சமாக உள்ளது.

உலகில் ஜப்பானில் தான் சராசரி மனித ஆயுள் அதிகம்.கடந்த 2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அங்கு சராசரி மனித ஆயுள் 86.39 ஆண்டுகள்.

இது 2060 ஆம் ஆண்டில் பெண்களைப் பொறுத்தவரை 90.93 ஆண்டுகளாக அதிகரித்து விடும். ஆண்களின் சராசரி ஆயுள் தற்போதைய 79.64 ஆண்டுகளில் இருந்து 84.19 ஆண்டுகளாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுரவத்திற்காக கொலை செய்யப்படும் பெண்கள் நினைவாக இணையதளம்!
சாதி, மதம், குடும்பச் சண்டை, வம்சப் பின்னணி இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் ஒன்று சேரும் இதயங்கள் சூரையாடப்பட்டு வருகின்றன. பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். காதலர்கள் கொலைச் செய்யப்படுகின்றனர். இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக கொலை செய்யப்பட்ட இளம் பெண்களின் நினைவாக “மெமினி” (Memini) என்ற புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

குடும்ப கவுரவத்தைக் காப்பதற்காக கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 5000 பேர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

குடும்பம், ஊர், மதம், சாதி, ஊர்க்கட்டுப்பாடு என்று எதையும் பற்றி கவலைப்படாமல் ஒன்று சேரும் உள்ளங்களைக் கண்டுபிடித்துக் கொலை செய்கின்றனர். அவர்களது உறவினர்கள். கொலையின் மூலம் பாதுகாக்கப்படும் கௌரவம்!

“மெமினி” என்ற லத்தீன் சொல்லுக்கு “நினவு” என்று பொருள். கௌரவக்கொலை செய்யப்பட்ட பெண்களின் நினைவாக இது தொடங்கப்பட்டுள்ளது. கௌரவத்திற்காகக் கொலை செய்யப்பட்ட 25 பெண்களின் வாழ்க்கை அவர்களின் ஆசா, பாசங்கள் போன்ற விவரங்கள் இந்த இணையதளத்தில் உள்ளது.

விருது பெற்ற நார்வே திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர், பாப் பாடகி தீபிகா தாதால் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இவரை ரசிகர்கள் ‘தீயா’ என்று செல்லமாக அழைக்கின்றனர்.

உலகம் முழுதும் இதுபோன்ற கௌரவத்திற்காக கொலை நடைபெறுகிறது என்றாலும் இது அதிகம் நடைபெறுவது சிரியா, எகிப்து, மொராக்கோ, இந்தியா, துருக்கி, வங்கதேசம், ஜோர்டான், இராக்கி குர்திஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இந்த வன்முறை சீரான அளவில் இருந்து வருகிறது.

தமிழ் குறும் படம் – டெக்னாலஜி
Tamil Short Film – Technology

தமிழ் குறும் படம் – டெக்னாலஜி

<object width="560" height="315" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/8h4WwSu_odY?version=3&hl=de_DE&rel=0" /><param name="allowfullscreen" value="true" /><embed width="560" height="315" type="application/x-shockwave-flash" src="http://www.youtube.com/v/8h4WwSu_odY?version=3&hl=de_DE&rel=0" allowFullScreen="true" allowscriptaccess="always" allowfullscreen="true" /></object>