|
Kids Are Quick(0) TEACHER: Maria, go to the map and find North America … TEACHER: John, why are you doing your math multiplication on the floor? |
|
சொர்க்கம் – நரகம்(0)
அமெரிக்கன் சம்பளம், சைனா உணவு, இங்கிலாந்து வாழ்க்கை, இந்திய மனைவி! நரகம்னா என்ன? அமெரிக்க மனைவி, சைனா வாழ்க்கை, இங்கிலாந்து உணவு, இந்திய சம்பளம்!’ -ஆர். மணி, நெல்லை- |
|
இளமைச் சிரிப்பு(0) இது நான் படித்த ஜோக். ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு மூன்று குழந்தைகள். அவர் வேலைக்குக் கிளம்பும் போதெல்லாம் தன் மனைவியிடம் ‘மூணு பொண்ணைப் பெத்தவளே வேலைக்குப் போயிட்டு வரேன்டி’ என்பார். அவர் இப்படிச் சொல்லக் காரணம், அவளை மூணு குழந்தை பெத்தவள்னு சொன்னால், அவள் தப்பு பண்ணமாட்டாள் என்பதால்தான். கணவன் அவ்வாறு சொல்வது மனைவியை எரிச்சல்படுத்தியது. ஒருநாள் கணவன், ‘‘மூணு குழந்தைக்குத் தாயே போயிட்டு வரேன்’’ என்று சொன்னதும் அவள், ‘‘ஒரு பிள்ளைக்குத் தகப்பனே, போயிட்டு வா’’ என்றாளாம். இதைக்கேட்டுவிட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அட்டகாசமாகச் சிரித்தார்களாம். |
|
70 கிலோ எடை(0) ஒருவர்: என்னது… 70 கிலோ எடையை ஒரு மணி நேரத்தில குறைச்சிட்டீங்களா…? எப்டீங்க…? நண்பர்: என் மனைவியை ஊருக்கு அனுப்பிச்சிட்டேன்… |
|
கழுத்து வலி(0)
கந்தப்பு: சுந்தரத்தானின் மனுசிக்கு கழுத்து வலியென்று டாக்குத்தரிட்டபோனால். அவர் “வெயிற்றை” குறைக்கச்சொல்லி சொல்லுகிறாராம் சோமண்ணை: சுந்தரத்தானின் மனுசி ஓல்லித்தடி மாதிரி. அதிலையும் இன்னம் வெயிற்றை குறைச்சால் எப்பிடியிருக்கும்? கந்தப்பு: டொக்டர் சொன்னது மனுசியின்ற வெயிற்றை இல்லையாம் சோமண்ணை: அப்ப எதையாம் ? கந்தப்பு: சுந்தரத்தானின் மனுசியின் கழுத்தில இருக்கிற 70 பவுண் தாலிக்கொடி 25 பவுண் தங்கச் சங்கிலியின்ர வெயிற்றாம். சோமண்ணை: ???!!!… ரவி செல்லத்துரை, சுவிஸ்- |
|
பிஸ்னஸ்(0) கந்தப்பு: எங்கட சுந்தரம் சீட்டுப்பிடித்தான் நட்டப்பட்டான். உண்டியல் நடத்தினான் நட்டப்பட்டான். கடைபோட்டான் நட்டப்பட்டான். சோமண்ணை: இப்ப நல்ல பிஸ்னஸ் நடக்குதாம் அப்படியெண்டால் என்ன பிஸ்னஸ் செய்கிறான்? கந்தப்பு: கடைக்குள்ள உண்டியலை வைச்சு கடையை கோயிலாக்கிப் போட்டானாம். ரவி செல்லத்துரை- |
Contacts and information
27 Iyanar Kovilady, Vannarpannai, Jaffna, Sri Lanka Ilaignan.com - Tamil News Portal |
Social networks |
Most popular categories |