Subscribe to RSS

29-வது முறையாக பிலிம்பேர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது அளிக்கப்பட்டது.

ரோஜா படத்துக்காக முதல் முறையாக பிலிம்பேர் விருது பெற்றார் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், காதலன், ஆர்டிபர்மன் சிறப்பு பிலிம்பேர் விருது, பம்பாய், ரங்கீலா, காதல் தேசம், மின்சாரக்கனவு, தில்சே, ஜீன்ஸ், தால், முதல்வன், அலைபாயுதே, லகான், பகத்சிங், சாதியா, ஸ்வதேஸ், ரங் தே பசந்தி, சில்லுனு ஒரு காதல், குரு (பின்னணி இசை), சிவாஜி த பாஸ்,ஜானே து யா ஜானே நா, ஜோதா அக்பர், டெல்லி 6, விண்ணைத்தாண்டி வருவாயா, விண்ணைத் தாண்டி வருவாயா (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு பிலிம்பேர் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.

இந்த முறை ராக்ஸ்டார் இந்திப் படத்தின் இசைக்காக அவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவர் பெறும் 29வது பிலிம்பேர் விருது.

நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த விருதினை அவர் பெற்றுக் கொண்டார். இந்த விருதின் நுனியில் வைரங்கள் பதித்துக்கொடுத்திருந்தனர் பிலிம்பேர் விழா குழுவினர்.

0 comments

Add your comment

Commenting is allowed only for registered users.

Other articlesgo to homepage

தமிழ் சினிமாவின் சக்ஸஸ் ஃபார்மூலா

தமிழ் சினிமாவின் சக்ஸஸ் ஃபார்மூலா(0)

நீங்கள் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகரா? நீங்களும் தமிழ் சினிமாவுக்குள் நுழைத்து கலக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கும் படமெடுக்கும் ஆசை இருக்கிறதா? நீங்கள் ஒரு படத்திற்கு கதை எழுத ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படியானால் இதோ உங்களுக்காக தமிழ் சினிமாவின் சில சக்ஸஸ் ஃபார்மூலாக்கள். கீழே உள்ள ஃபார்மூலாக்களை கவனமாக படியுங்கள். தொடர்ந்து படங்களை பாருங்கள். தமிழ் சினிமாவின் சூட்சமத்தை புரிந்து கொள்ளுங்கள். ஹீரோ சாதாரண ஆளாக இருப்பார். தனது காதலிக்காகவோ அல்லது வில்லனை பழிவாங்கவோ கடின உழைப்பார். ஒரே

நண்பன் – சினிமா விமர்சனம்

நண்பன் – சினிமா விமர்சனம்(0)

இந்தியக் கல்வி முறையை ‘மாத்தி யோசி’க்கச் சொல்லும் நம்ம ‘நண்பன்’! அவசியமான, அர்த்தம் உள்ள, அழுத்தமான மெசேஜ் சொல்லும் இந்தி ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தைத் தமிழுக்குத் தந்ததற்காக ஷங்கருக்கு நன்றி. பிரபலமான பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த். ‘மதிப்பெண்களும் வெற்றியும் மட்டுமே பிரதானம்’ என வலியுறுத்தும் சிடுமூஞ்சி கல்லூரி முதல்வர் சத்யராஜ். திணிக்கப்படும் இந்த அழுத்தங்களால் மாணவர்களின் வாழ்க்கை எப்படித் திசை மாறுகிறது? விஜய் நடத்தும் அறிவுக் களேபரங்களால் சத்யராஜ் மாறினாரா? இந்த

ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?

ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?(0)

சினிமா ஒரு மாயை என்பதால்தான் படத்தில் காணும் எல்லாம் மாயையாகவே இருக்கின்றனவா? வெள்ளை தேவதைகள், என்ன வந்தது என்று வலிய வந்து ஆடுகிறார்கள்? ஜீப்களும் கார்களும் எதற்காக றெக்கையில்லாமலே பறக்கின்றன? முலைகள் எதற்காக காமிராக்களுக்கு முன்னால் வந்து குலுங்குகின்றன? ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன? சரி, சினிமாத் தொழில் என்பது சூதாட்டம் போன்றது என்பது தெரிந்தும் எதற்காக சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன? நாட்டிலே உள்ளவர்களுக்கெல்லாம் ஜாலியாகப் பொழுதுபோகட்டும் என்கிற பரந்த மனப்பான்மையாலா? பக்கத்து மாநிலங்களில் எல்லாம் எடுப்பதால்

read more
banner
banner


Contacts and information

27 Iyanar Kovilady, Vannarpannai, Jaffna, Sri Lanka

Ilaignan.com - Tamil News Portal

Social networks

Most popular categories

Ilaignan
© 2011 Ilaignan.com theme by Ilaignan.com All rights reserved.