Subscribe to RSS

பொம்மிம்மா!

என் அம்மா கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்!

குளித்து முடித்த நீ நடந்து வந்து பால் சொம்பை வாங்கும் கணங்கள்தான் எனக்குத் தேவகணங்கள். என் ஒவ்வொரு நாளும் விடிவது அப்போதுதான்!

பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சொம்பைத் திருப்பித் தருவாய். அந்தச் சொம்பிலிருக்கும் மிச்சத் துளிகள்தான் எனக்கு தேவாமிர்தம். யாருமில்லாத இடம் பார்த்து… தலையை உயர்த்தி, சொம்பைக் கவிழ்த்தால் என் நாக்கில் சொட்டும் அந்த அமிர்தத் துளிகள்!

என் கல்லூரி விடுமுறை நாட்களில், அப்பாவுக்குத் துணையாக நான் கல்யாணப் பந்தல் போடப் போகிறபோதெல்லாம்… என்றாவது ஒரு நாள் உனக்கும் திருமணம் நடக்கும்… அந்தத் திருமணத்தில் இப்படிப் பந்தல் போடுவதுதான் என் பங்காக இருக்கும் என்று நினைப்பேன். ஆனால்… ஆனால்… என் உள் மனதின் ஆழத்தில் அந்த மணப்பந்தலில் மாப்பிள்ளையாக அமரப் போவதே நீதானடா! என்று எப்போதும் ஒரு பட்சி சொல்லும்.

என் படிப்பு முடிந்ததும் ஒரு நாள் என்னை அழைத்தார் உன் தந்தை. தம்பி… நம்ம மில்லைப் பாத்துக்கிறீங்களா? என்றார்.

சரிங்க! என்று வேலையை ஆரம்பித்தேன்.

அடுத்து வந்த பொங்கல் திருநாளில்… உங்கள் வீட்டுக்கு வந்த என்னை உள்ள போய்ச் சாப்பிட்டு வாங்க தம்பி என்றவர், திரும்பி உன்னை அழைத்து தம்பிக்கு சாப்பாடு போடும்மா என்றார். ஆடிப்போய்விட்டேன் நான்.

பொங்கல் வைத்து அம்மனுக்குப் படையல் போடுவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். ஆனால், நீ பரிமாற வந்தது, அம்மனே எனக்குப் படையல் போடுவதைப் போல இருந்தது. நம்ப முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்தேன்.

வேற என்ன வேணும் தம்பி? என்றார் உன் தந்தை.

ஒண்ணும் வேணாங்க… பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதுங்க எனக்கு என்றேன்.

சிரித்தபடி என்னைப் பார்த்த உன் தந்தை, அந்த தேவ வார்த்தைகளை உதிர்த்தார்… பொம்மியை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சா கண் கலங்காமப் பாத்துப்பீங்களா..?

கண்கள் கலங்கின எனக்கு. உள்ளுக்குள் இருக்கும் பட்சியோ சொன்னேன்ல என்று கூவிக் குதிக்க ஆரம்பித்தது.

திருமணம் முடிந்த அடுத்த நாள் அதிகாலை சட்டென்று விழிப்பு வந்து, வேகவேகமாக முகம் கழுவிக்கொண்டு நான் கிளம்புகையில், பால் எடுத்துட்டு வரவா கௌம்பிட்டீங்க என்றாய் ஒரு மர்மப் புன்னகையோடு.

ஆமாம்  என்றேன்.

அதெல்லாம் உங்க அம்மா எடுத்து வந்து கொடுத்துட்டாங்க என்றாய்.

அடடா! என்றேன்.

ஏன் ரொம்பக் கவலைப் படறீங்க… அந்த மூணு சொட்டுப் பால் போயிடுச்சின்னா என்றாய் சிரித்தபடியே.

தெரியுமா? என்றேன் வியப்பாக.

எப்பவோ! என்று புன்னகைத்துவிட்டு, மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வெச்சிக்கிட்டு… ?பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதும்?னு வசனம் பேசுனீங்க என்று கிள்ளினாய். ஆஹா… ராணி வம்சக் கிள்ளல் அது.

மூணு சொட்டு இனிமே மறந்துடுங்க. சொம்பு நிறைய பால் காய்ச்சித் தர்றேன். மூச்சு முட்டக் குடிங்க! என்று என் கன்னத்தில் தட்டிவிட்டு நகர்ந்தாய்.

அனுபவிடா! என்று கூப்பாடு போட்டது என் பட்சி.

பொம்மைக் கடைப் பக்கம் போகாதே
என்றால் கேட்கிறாயா
பார்…

குழந்தை ஒன்று தன் தாயிடம்
உன்னைக் காட்டி
இந்த பொம்மையை வாங்கிக்கொடு
என்று அடம்பிடிப்பதை

இன்று
காதல் ஜெயந்தி
முழிக்காதே….
இன்று உன் பிறந்தநாள்.

தபூ சங்கர்-

0 comments

Add your comment

Commenting is allowed only for registered users.

Other articlesgo to homepage

நான் நலமில்லை… நீ?

நான் நலமில்லை… நீ?(0)

பள்ளிப் படிப்பில் பாதியைக் கூட இதுவரை யாரும் தாண்டியிராத கிராமத்துக்காரன் நான். ?கல்லூரியில் படிக்கப் போகிறேன்? என்று சொன்னதும்,  ?வேணாம் கண்ணு! டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி வரும்போது ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா!? என்று பதறினாள் என் அம்மா. எனக்குச் சிரிப்புதான் வந்தது. ?ஆமாமா! அங்க பட்டம் கொடுக்கும் போது, கூடவே ஒரு புள்ளையையும் கொடுப்பாங்களாக்கும்! அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு பேரு பண்ற தப்பும்மா!? என்றேன். அப்படின்னா, எந் தலையில

காதல் ஆத்திசூடி

காதல் ஆத்திசூடி(0)

அவளிடம் மதி மயங்கு! உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்… சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள். அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்! உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா? உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும். மீண்டும் தொலைப்பதற்காக! * ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!(0)

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும் இயந்திரப் பறவைகள் எதிரியாகும் ஆமிக்காரன் இயமன் ஆவான் உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும் விழிகளிலே குருதி கசியும் ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! தொப்புள் கொடியில் பலமுறை தீப்பிடிக்கும் பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? ஒரணியில் திரண்டு ஒரே முடிவு எடுப்பீர்களா? உங்கள் அரசியல் விளையாட்டில் எங்களைத் தோற்கடிக்காதீர்கள்! எந்த இனத்தவனும் உங்களை மன்னிக்கமாட்டான் சொந்த இனத்தவனைக்

நறுக்குகள் – காசி ஆனந்தன்

நறுக்குகள் – காசி ஆனந்தன்(0)

மாடு – ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வண்டி இழுக்கிறது கொம்பை மறந்த மாடு முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே! நாற்காலி இங்கே வேறுபாடு அதிகம் இல்லை நாற்காலிக்கும் கட்டிலுக்கும். வீடு தூங்க கட்டில் நாடு தூங்க நாற்காலி ஞானம் ஞானம் பெற்றது நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில் பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால். பாடம் புரட்சியாவது வெங்காயமாவது என்கிறாய்

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?(0)

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்…. அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட… இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில்

read more
banner
banner


Contacts and information

27 Iyanar Kovilady, Vannarpannai, Jaffna, Sri Lanka

Ilaignan.com - Tamil News Portal

Social networks

Most popular categories

Ilaignan
© 2011 Ilaignan.com theme by Ilaignan.com All rights reserved.