Subscribe to RSS

எம்மால் கோடிஸ்வரராகும் ஷூக்கர் பேர்க்: சொத்தின் மதிப்பு தெரியுமா?

பலரும் எதிர்பார்த்ததைப் போல பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களைப் பேஸ்புக் அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) சமர்ப்பித்தது.

இதன் மூலம் வெளியுலகுக்கு பல சுவாரஸ்யமான தகவல்கள் சிறிது சிறிதாகக் கசிந்த வண்ணம் உள்ளன.

இதேவேளை பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர்பேர்கின் பெறுமதி என்னவாக இருக்கலாம் அதாவது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவாக இருக்கலாம் என விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் எவ்வளவு பிரபலம் பெற்று விளங்குகின்றதோ அதே அளவிற்கு அதன் ஸ்தாபகர் ஷூக்கர்பேர்க்கும் புகழ்பெற்றுத்திகழ்கின்றார்.

பலரின் கணிப்பின் படி ஷூக்கர்பேர்கின் பெறுமதி சுமார் 28 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

அதாவது ஆரம்பப் பொது வழங்கலுடன் பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டொலர்களாகக் கணிக்கப்படுமாயின் அதில் 28% பங்கு ஷூக்கர் பேர்க்கின் உடையது .எனவே அவரின் பெறுமதியானது 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இப் பெறுமதியின் படி போர்ப்ஸ் சஞ்சிகையின் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவருக்கு கிடைக்கும் இடம் 9 ஆகும்.

என்ன? கேட்கும் போதே தலை சுற்றுகின்றதா? எங்களை வைத்தே அதாவது எமது தரவுகளை வைத்தே ஷூக்கர் பேர்க் கோடிஸ்வரராகி விட்டார் என குற்றஞ்சாட்டுகின்றனர் இன்னொரு பகுதியினர்.

கடந்த வருடம் ஷூக்கர் பேர்க்கின் மொத்த சம்பளம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள். (ஊக்குவிப்புக் கொடுப்பனவு உட்பட)

எனினும் அடுத்த வருடம் முதல் அப்பிளின் ஸ்டீவ் ஜொப்ஸைப் போல ஒரு டொலரை மட்டுமே ஊதியமாகப் பெறப்போவதாகவும் ஷுக்கர்பேர்க் அறிவித்துள்ளார்.

தனது நிதி திரட்டலுக்கான காரணம் சிறப்பான சேவைக்கே தவிர, பணம் பெறுவதற்காக அல்ல “we don’t build services to make money; we make money to build better services.” எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments

Add your comment

Commenting is allowed only for registered users.

Other articlesgo to homepage

இணையத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் தளங்கள்!

இணையத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் தளங்கள்!(0)

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது பேஸ்புக் என்றே இருக்கும். எனினும் உண்மை அதுவல்ல. இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் அமேசன்.கொம் ஆகும். சுயாதீன நிறுவனமொன்று நடத்திய ஆய்வொன்றிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வுப்படி அதிகம் பணமீட்டும் நிறுவனங்கள் பட்டியல் இதோ : 1. Amazon இணையத்தில் பொருட்களை வாங்க உதவும் தளம் இது. பொருட்களை வாங்குவதற்கான ஒன்லைன் சந்தையாக விளங்கும்

கூகுள் க்ரோம் இந்திய விளம்பரம்

கூகுள் க்ரோம் இந்திய விளம்பரம்(0)

கூகுள் க்ரோம் இந்திய விளம்பரம்

ஜிமெயில் கணக்கு முடங்கி போனால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

ஜிமெயில் கணக்கு முடங்கி போனால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்(0)

இன்றைய உலகில் கணணி பயனாளர்கள் பெரும்பாலும் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர். அந்த கணக்கை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் சிலர் அவ்வப்போது மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர். இவர்களின் கணக்கு ஒரு சில நேரங்களில் முடங்கி போய்விடும். அந்த நேரத்தில் அவர்களின் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துவதற்கு மூன்று வழிகளில் உள்ளது. அவை Standard, HTML and Mobile. Standard வகையில் ஏதேனும் பிழை இருப்பின் மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான்

read more
banner
banner


Contacts and information

27 Iyanar Kovilady, Vannarpannai, Jaffna, Sri Lanka

Ilaignan.com - Tamil News Portal

Social networks

Most popular categories

Ilaignan
© 2011 Ilaignan.com theme by Ilaignan.com All rights reserved.