Subscribe to RSS

இணையத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் தளங்கள்!

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது பேஸ்புக் என்றே இருக்கும்.
எனினும் உண்மை அதுவல்ல. இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் அமேசன்.கொம் ஆகும்.
சுயாதீன நிறுவனமொன்று நடத்திய ஆய்வொன்றிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
அந்நிறுவனத்தின் ஆய்வுப்படி அதிகம் பணமீட்டும் நிறுவனங்கள் பட்டியல் இதோ :

1. Amazon
இணையத்தில் பொருட்களை வாங்க உதவும் தளம் இது. பொருட்களை வாங்குவதற்கான ஒன்லைன் சந்தையாக விளங்கும் இது, விநாடிக்கு $776.66 படி. இதன் மொத்த வருடாந்த வருவாய் $24,509,000,000 ஆகும்.

2. Google
இணைய உலகில் கூகுள் தொடர்பில் அறியாதவர் எவருமிலர் எனலாம். இதன் வருட வருமானம் $23,650,560,000. ஒரு வினாடிக்கு $749.46 ஆகும்.

3. Comcast
அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் இந்த தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தத் தளத்தின் ஆண்டு வருமானம் $8,727,360,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு 276.56$ சம்பாதிக்கிறது.

4. ebay
Amazon தளத்தை போன்று இதுவும் ஒன்லைனில் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் உதவும் இணையதளம். வினாடிக்கு 276.56$ ஐயும் ஆண்டுக்கு $8,727,360,000 ஐயும் இது சம்பாதிக்கின்றது.

5. Yahoo
இணையத்தில் மிகப்பிரபலமான தளம் இது. இதனுடைய ஆண்டு வருமானம் $6,460,000,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $204.71 ஆகும்.

6.Reuters
செய்தித்தளமான இது வினாடிக்கு 107$ வருமானமும் ஆண்டுக்கு $ 3,400,000,000 வருமானமும் பெற்றுக்கொள்கின்றது.

7. AOL
இந்தத் தளம் வினாடிக்கு 99.41$ம், ஆண்டுக்கு $3,137,100,000ம் வருமானமாகப் பெற்றுக்கொள்கின்றது.

8. Expedia
பயணம் செய்பவர்களுக்கு இது பயனுள்ள தளமாகும். டிக்கெட்டுகள் வாங்குவதில் இருந்து விமானங்களின் நேரங்கள் மற்றும் பல தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தத் தளம் வருடத்திற்கு $2,937,010,000 வருமானம் பெற்றுத் தருகிறது. இதன் ஒரு வினாடிக்கான வருமானம் $93.07 ஆகும்.

9. Paypal
ஒன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும். உலகம் முழுவதும் பணப் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள இணைய தளம் இது. இந்தத் தளம் வினாடிக்கு 91.90$ படி ஆண்டுக்கு $2,900,000,000 சம்பாதிக்கிறது.

10. iTunes
பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது அப்பிள் நிறுவனத்தின் iTunes இணைய தளமாகும். இந்தத் தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் 60.21$. ஆண்டுக்கு $1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் பெற்றுக் கொள்கின்றது அப்பிள்.

பலரது விருப்பத்திற்குரிய பேஸ்புக், இப்பட்டியலில் பெற்றுக் கொண்டுள்ள இடம் 16. இதன் ஆண்டு வருமானம் $1,000,000,000 .வினாடிக்கு $31.69.

0 comments

Add your comment

Commenting is allowed only for registered users.

Other articlesgo to homepage

காதல் ஆத்திசூடி

காதல் ஆத்திசூடி(0)

அவளிடம் மதி மயங்கு! உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்… சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள். அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்! உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா? உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும். மீண்டும் தொலைப்பதற்காக! * ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!(0)

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும் இயந்திரப் பறவைகள் எதிரியாகும் ஆமிக்காரன் இயமன் ஆவான் உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும் விழிகளிலே குருதி கசியும் ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! தொப்புள் கொடியில் பலமுறை தீப்பிடிக்கும் பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? ஒரணியில் திரண்டு ஒரே முடிவு எடுப்பீர்களா? உங்கள் அரசியல் விளையாட்டில் எங்களைத் தோற்கடிக்காதீர்கள்! எந்த இனத்தவனும் உங்களை மன்னிக்கமாட்டான் சொந்த இனத்தவனைக்

நறுக்குகள் – காசி ஆனந்தன்

நறுக்குகள் – காசி ஆனந்தன்(0)

மாடு – ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வண்டி இழுக்கிறது கொம்பை மறந்த மாடு முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே! நாற்காலி இங்கே வேறுபாடு அதிகம் இல்லை நாற்காலிக்கும் கட்டிலுக்கும். வீடு தூங்க கட்டில் நாடு தூங்க நாற்காலி ஞானம் ஞானம் பெற்றது நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில் பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால். பாடம் புரட்சியாவது வெங்காயமாவது என்கிறாய்

எம்மால் கோடிஸ்வரராகும் ஷூக்கர் பேர்க்: சொத்தின் மதிப்பு தெரியுமா?

எம்மால் கோடிஸ்வரராகும் ஷூக்கர் பேர்க்: சொத்தின் மதிப்பு தெரியுமா?(0)

பலரும் எதிர்பார்த்ததைப் போல பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களைப் பேஸ்புக் அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) சமர்ப்பித்தது. இதன் மூலம் வெளியுலகுக்கு பல சுவாரஸ்யமான தகவல்கள் சிறிது சிறிதாகக் கசிந்த வண்ணம் உள்ளன. இதேவேளை பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர்பேர்கின் பெறுமதி என்னவாக இருக்கலாம் அதாவது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவாக இருக்கலாம் என விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் எவ்வளவு பிரபலம் பெற்று

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?(0)

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்…. அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட… இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில்

read more
banner
banner


Contacts and information

27 Iyanar Kovilady, Vannarpannai, Jaffna, Sri Lanka

Ilaignan.com - Tamil News Portal

Social networks

Most popular categories

Ilaignan
© 2011 Ilaignan.com theme by Ilaignan.com All rights reserved.